கடவுச்சீட்டை மீள ஒப்படைக்க 3 கோடி இலஞ்சம்: சிஐடி என குறிப்பிட்ட 4 பேர் கைது!

Date:

குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் போன்று நடித்து ஒரு கோடி ரூபா இலஞ்சம் பெற முயன்ற நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (29) பிற்பகல் கொள்ளுப்பிட்டி பகுதியில் பெண் ஒருவரும் மூன்று ஆண்களும் கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தெஹிவளை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள வீடொன்று சோதனையிடப்பட்டு முறைப்பாட்டாளரிடம் இருந்த 12,000,000 ரூபா மற்றும் 3,500 டொலர்கள் சந்தேகநபர்களால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த வீட்டில் பணிபுரியும் இந்தியரின் கடவுச்சீட்டை சந்தேகநபர்கள் எடுத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பின்னர் அவர்கள் புகார்தாரரை தொலைபேசியில் அழைத்து, விசாரணையை தவிர்த்து அவருக்கு கடவுச்சீட்டை வழங்குவதெனில் ரூ.4 கோடி ரூபா இலஞ்சம் தர வேண்டுமென கேரியுள்ளனர்.

பின்னர், மூன்றரை கோடியாக குறைக்கப்பட்டு, முதல் பாகமாக, ஒரு கோடி ரூபாய் லஞ்சமாக வாங்கப்பட்டது.

அதன் பிரகாரம், ஒரு கோடி ரூபாவை இலஞ்சமாகப் பெற்ற மூன்று ஆண்களும், ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று (30) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

தமிழ் தேசிய கட்சிகளின் சந்திப்பில் சூம் வழியாக கலந்து கொண்ட தமிழ் தேசிய பேரவைக்கு எதிர்ப்பு!

தமிழ் சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் தமிழ் தேசிய கட்சிகளுக்கு இடையிலான கலந்துரையாடல்...

மின்னல் தாக்கி யுவதி பலி

வெல்லவாய பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட ஹந்தபானாகல, கென் ஹத பகுதியில் மின்னல்...

வழக்கு பொருட்களிலிருந்து ரூ.500 திருடிய பொலிஸ்காரர் கைது!

பொரல்ல பொலிஸ் நிலையத்தில் வழக்குப் பொருட்களிலிருந்து ரூ. 500 திருடப்பட்டது தொடர்பாக,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்