‘ஈ.பி.டி.பி யோகேஸ்வரி எங்கள் பரம்பரை வீட்டை அபகரித்து விட்டார்’: உறவுக்கார பெண் பரபரப்பு குற்றச்சாட்டு!

Date:

யாழ்ப்பாணம், நல்லூரிலுள்ள தமது பூர்வீக வீட்டை, யாழ் மாநகரசபையின் ஈ.பி.டி.பியின் முன்னாள் மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா முறையற்ற விதமாக ஆக்கிரமித்துள்ளதாக அவரது உறவினரான பெண்ணொருவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இன்று (29) யாழ்ப்பாணம் ஊடக மையத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

யோகேஸ்வரியின் கணவர் பற்குணராஜாவின் சகோதரரின் மனைவியின் சகோதரியே இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

தன்னுடையதும், தனது சகோதரியுடையதுமான அந்த வீடு, காணியை 1989ஆம் ஆண்டில் யோகேஸ்வரி குடும்பம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, சிலகாலம் குடியிருக்க அனுமதித்ததாகவும், யோகேஸ்வரின் கணவர் காலமாகியதை தொடர்ந்து, கணவரின் சகோதரர் குடும்பத்துடனான தொடர்புகளை துண்டித்துக் கொண்டு, வீட்டை விட்டு வெளியேற மறுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, உறவினரான பெண், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். அங்கு இரு தரப்பும் விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது, 1992ஆம் ஆண்டளவில் வீட்டை பணம் கொடுத்து பெற்றுவிட்டதாக யோகேஸ்வரி கூறியதாகவும் குறிப்பிட்டார்.

அவர் கூறியது உண்மையெனில், வீட்டு உறுதியை வெளிப்படுத்தும்படியும் உறவினரான பெண் சவால் விடுத்தார். வீட்டு உறுதி தம்மிடமே இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இது குறித்து பொலிசார் மேலதிக நடவடிக்கையெடுக்க முடியாமல், நீதிமன்றத்தை நாடும்படி கூறியதாகவும், தாம் நீதிமன்றத்தை நாடவுள்ளதாகவும் தெரிவித்தார்.

தாம் பலமுறை அந்த வீட்டுக்கு சென்ற போதும், வீடு பூட்டியிருந்ததாகவும், அந்த வீட்டின் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தார்.

யோகேஸ்வரி பற்குணராஜா ஈ.பி.டி.பி அமைப்பின் உயர்மட்ட உறுப்பினர் ஆவார். கடந்த முறை யாழ் மாநகரசபை உறுப்பினராக பதவி வகித்த அவர், அதற்கு முறை யாழ் மாநகரசபை முதல்வர் பதவியை வகித்திருந்தார்.

spot_imgspot_img

More like this
Related

காமக்கொடூரன் மீண்டும் கைது!

பெண் மருத்துவர் ஒருவரின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்குள் அத்துமீறி நுழைந்து, அவரை அச்சுறுத்தி...

அம்பாறை மாவட்டப் பொலிஸாரின் ஏற்பாட்டில் திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் தீபாவளி விசேட பூஜை வழிபாடு

தீபாவளித் திருநாளை முன்னிட்டு அம்பாறை மாவட்டப் பொலிஸாரின் ஏற்பாட்டில் விசேட பூஜை...

ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கு வாய்ப்பு மிக குறைவு: ட்ரம்ப்

ஈரானுடனான மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்