27.3 C
Jaffna
January 10, 2025
Pagetamil
இந்தியா

நாய்க்கு புலி வேஷம்: மர்ம நபர்களை தேடும் போலீஸார்

மயிலாடுதுறையில் சிலநாட்களுக்கு முன் சிறுத்தை நடமாடியதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். இந்நிலையில், புதுச்சேரி லாஸ்பேட்டை குறிஞ்சி நகர் பகுதியில் புலி உலாவுவதாக பொதுமக்களிடையே தகவல் பரவியது.

ஆனால், சில மர்ம நபர்கள் தெரு நாயின் உடலில் புலியைப் போலவே அழகான கோடுகளை வரைந்து, வண்ணமிட்டு உலவவிட்டது தெரியவந்தது. புலி வேஷம் போடப்பட்ட நாய், கடந்த 2 நாட்களாக குறிஞ்சி நகர் பகுதியில் உலா வருகிறது.

இதுகுறித்து லாஸ்பேட்டை போலீஸார் விசாரணை மேற்கொண்டு, நாய்க்கு புலி வேடமிட்ட ஆசாமிகளைத் தேடி வருகின்றனர். அதே நேரத்தில், புலி வேடமிட்ட நாயை துரத்தி, அதை வீடியோ எடுத்து சிலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு, அரசை விமர்சித்து வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

விடுதலைக்காக சொத்தை விற்றவர் வஉசி; சொத்துக்காக திருமணம் செய்தவர் பெரியார் – சீமான் ஆவேசம்

Pagetamil

இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தும் குழுவின் தலைவன் கைது!

Pagetamil

திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவர்களின் அசத்தல் சாதனை

east tamil

போதைப் பொருள் கடத்தல் வழக்கு: நடிகர் மன்சூர் அலிகான் மகனுக்கு நிபந்தனை ஜாமீன்

Pagetamil

நடிகர் அல்லு அர்ஜுனுக்கு மீண்டும் நோட்டீஸ்

Pagetamil

Leave a Comment