புதிய உச்சம்: இந்தியாவில் ஒரேநாளில் 4 இலட்சத்திற்கும் அதிக தொற்றாளர்கள்!

Date:

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4 இலட்சத்திற்கும் அதிகமான கொரொனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.

ஒரே நாளில் 4 இலட்சத்திற்கும் அதிக தொற்றாளர்கள் பதிவான முதலாவது நாடாக இந்தியா பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 4 இலட்சத்து 8 ஆயிரம் பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த 21ம் திகதியன்று முதன்முறையாக 3 இலட்சத்தை கடந்திருந்த எண்ணிக்கை 10 வது நாளில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

ஒரே நாளில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அமெரிக்காவில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பதிவாகியிருந்தது. அன்றைய காலகட்டத்தில் அந்நாட்டில் 307,516 பேர் பாதிப்புக்கு உள்ளாகியிருந்தனர்.

இதனிடையே கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் கொரோனா தொற்றால் இந்தியாவில் 48,768 பேர் உயிரிழந்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

இலங்கைக்கு பெருந்தொகை போதைப்பொருளை கடத்த முயன்ற விஜய் கட்சி பிரமுகர் சிக்கினார்!

இலங்கைக்கு கடத்துவதற்காக ரூ.135 கோடி மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் பதுக்கி வைத்திருந்த நாகையைச்...

‘மஹிந்தவுக்கு ஏவுகணை அடித்தால் எல்லாம் சரியாவிடும்’: எக்னொலிகொட வழக்கில் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் சாட்சியம்!

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில், ஜனாதிபதி பயணிக்கும் விமானத்தின் மீது...

ஷிராந்திக்கு பிணை!

‘சிரிலிய சவிய’ கணக்கு தொடர்பான விசாரணைகளுக்கு அமைய இலஞ்ச ஊழல் விசாரணை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்