நுவரெலியா, டோப்பாஸில் குஷ் மற்றும் ஹஷிஸ் போதைப்பொருளை வைத்திருந்த பிரித்தானிய பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நுவரெலியா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சந்தேகநபர்கள் பயணித்த வேனை சோதனையிட்டதன் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரித்தானியப் பெண்ணிடம் இருந்து 18 கிராம் 920 மில்லிகிராம் குஷ் போதைப்பொருளையும், வேனின் இலங்கை சாரதியிடம் இருந்து 2 கிராம் 600 மில்லிகிராம் ஹஷிஷையும் பொலிசார் மீட்டுள்ளனர்.
28 வயதான சாரதி நுவரெலியாவை வசிப்பிடமாகக் கொண்டவர் மற்றும் பெண் பிரித்தானியவைச் சேர்ந்த 35 வயதானவர்.




