யாழ், மன்னாரில் வங்கி ஊழியர்கள்… சாவகச்சேரியில் முச்சக்கர வண்டி சாரதி: வடக்கின் இன்றைய கொரோனா விபரம்!

Date:

வடமாகாணத்தில் இன்று 36 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் யாழ்மாவட்டத்தில் 29 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

இன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம் பல்கலைகழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் 644 பேரின் பிசிஆர் மாதிரிகள் சோதனையிடப்பட்டன.

இதில் யாழ் மாநகரசபை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 13 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். இதில் யாழ் பொலிஸ் நிலையத்தை சேர்ந்த 8 பேரும், யாழ் நகரில் அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் நடத்திய எழுமாற்றான சோதனையில் அரச வங்கி ஊழியர், தனியார் விடுதி ஊழியர் ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். யாழ் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்ட ஒருவர், யாழ்ப்பாண சிறைச்சாலை கைதிகள் இருவர் அடையாளம் காணப்பட்டனர்.

உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 4 பேர் அடையாளம் காணப்பட்டனர். அதில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், மின்சாரசபை பணியாளர்கள் 3 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 5 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். இதில் ஒருவர் முச்சக்கர வண்டி சாரதி. வைத்தியசாலைக்கு முன்பகுதியில் தரித்து நின்று சேவையில் ஈடுபடுபவர். காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டதையடுத்து, வைத்தியசாலைக்கு சென்றார்.

வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர், வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர், மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 பேர் அடையாளம் காணப்பட்டனர். அவர்களில் ஒருவர் வங்கி உத்தியோகத்தர். மற்றையவர் மின்சாரசபை ஊழியர்.

spot_imgspot_img

More like this
Related

கறுப்பு ஜீலை இனப்படுகொலையில் பலியான தமிழ் மக்களுக்குப் பொது நினைவுச்சின்னம் அமைக்கப்பட வேண்டும்

கறுப்பு ஜீலை இனப்படுகொலையில் பலியான தமிழ் மக்களுக்குப் பொது நினைவுச்சின்னம் அமைக்கப்பட...

மட்டக்களப்பில் பாதுகாப்பு படையினரின் பெயரை போலியாக பயன்படுத்தி கடைகளில் நூதனமாக பண மோசடி ஈடுபட்ட நபரை கைது செய்ய நடவடிக்கை

மட்டக்களப்பு மற்றும் காத்தான்குடி பிரதேசங்களில் உள்ள யூஸ் விற்பனை நிலையங்கள் மற்றும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்