ஐபிஎல் 2024 இன் எஞ்சியிருக்கும் போட்டிகளில் வனிந்து ஹசரங்கவிற்கு பதிலாக இலங்கை வீரர் விஜயகாந்த் வியாஸ்காந்தை சன்ரைசஸ் ஹைதராபாத் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.
கடந்த டிசம்பரில் நடைபெற்ற வீரர்கள் ஏலத்தில் சன்ரைசஸ் அணியால், ரூ. 1.5 கோடிக்கு ஹசரங்க ஏலத்தில் வாங்கப்பட்டிருந்தார்.
இருப்பினும், அவரது இடது காலில் ஒரு நாள்பட்ட வலி, நடப்பு சீசனில் அவரால் ஆட முடியாத நிலைமையை ஏற்படுத்தியது.




