நல்லதண்ணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லக்ஷபான, வாலமலை பிரிவில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரி ஆலய வருடாந்த தேர் திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்னதானம் விஷமாகி சுமார் 120 பேர் மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (07) பதிவாகியுள்ளது .
தோட்ட தொழிலாளர்களான ஆண் , பெண்கள் மற்றும் சிறு பிள்ளைகள் இச்சம்பவத்துக்கு முகம் கொடுத்துள்ளதாக நல்லதண்ணி பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
ஆலயத்தில் வழங்கப்பட்ட அன்னதான உணவை உண்ட பின்னர் பிற்பகல் 06.00 மணியளவில் வாந்தி, மயக்கம் போன்ற அறிகுறிகள் தோன்றியுள்ளதையடுத்து அவர்களை உடனடியாக மஸ்கெலியா பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது .
அவர்களின் பெரும்பாலானவர்கள் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளதுடன் இன்னும் 40 பேர் மாத்திரமே சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்களது நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர் .




