யாழில் கஞ்சா மீட்பு!

Date:

யாழ் செம்மணி பகுதியில் வைத்து 18 கிலோகிராம் கேரள கஞ்சாவினை யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

சாவகச்சேரி நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் 7 நாட்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த இருவரிடம் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரார் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் செம்மணி பகுதியில் வைத்து இன்று 18 கிலோகிராம் கேரளா கஞ்சாவினை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த கஞ்சாவினை உடைமையில் வைத்திருந்த சம்பவத்துடன் தொடர்புடைய மன்னார் பகுதியை சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் பாவித்த மோட்டார் சைக்கிள் ஒன்றினையும் கஞ்சாவினை கடத்த பயன்படுத்த பட்டிருந்த வானொலி பெட்டியையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை இன்று யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் நீதிமன்றில் முன்னிலைப் படுத்தவுள்ளனர்.

கடந்த 30ஆம் திகதி சாவகச்சேரியில் வைத்து 4 கிலோகிராம் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த நபர்களிடம் பொலிஸார் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த கஞ்சாவினை செம்மணி மற்றும் மன்னார் பகுதியில் போலீசார் மீட்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

பங்களாதேஷ் வீரர் முஷ்பிகுர் ரஹீம் டெஸ்டில் இருந்து ஓய்வுபெறுகிறார்!

பங்களாதேஷ் வீரர் முஷ்பிகுர் ரஹீம் 2027 பெப்ரவரியில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு...

இலங்கைக்கு தப்பிவந்த 5 தேடப்படுபவர்கள் சீனாவுக்கு நாடு கடத்தல்

சீன அரசாங்கத்தால் தேடப்பட்டு வந்த ஐந்து சீனப் பிரஜைகள், இலங்கையின் பல்வேறு...

திருப்பரங்குன்றம் கல்த்தூணில் தீபம் ஏற்றப்பட்டது

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல்த்தூணில் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி இன்று...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்