25.6 C
Jaffna
January 10, 2025
Pagetamil
இந்தியா

கள்ளக்காதலர்கள் விபரீத முடிவு: லொறியுடன் மோதி உயிரிழப்பு!

கேரளாவில் கள்ளக்காதலியுடன் காரில் சென்றவர், கண்டெய்னர் லொறியுடன் வேண்டுமென்றே மோதியதில், இருவரும் உயிரிழந்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற இந்த விபத்தில் நூரநாட்டைச் சேர்ந்த அனுஜா ரவீந்திரன் (37), சாரும்மூட்டைச் சேர்ந்த முகமது ஹாசிம் (31) ஆகியோர் உயிரிழந்தனர். ஹாஷிம் வேண்டுமென்றே விபத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

கடந்த நான்கு வருடங்களாக ஹாசிம் மற்றும் அனுஜா இருவரும் நெருக்கமாக இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். காரில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து விபத்து ஏற்பட்டது.

பாடசாலை ஆசிரியை அனுஜா, மற்ற ஆசிரியர்களுடன் பாடசாலை சுற்றுலா பயணத்திற்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்தபோது, ஹாஷிம் பள்ளி வாகனத்தை வழிமறித்து, அனுஜாவை வலுக்கட்டாயமாக தனது காரில் அழைத்துச் சென்றார்.

அனுஜா ஹாஷிமை தனது உறவினர் விஷ்ணு என்று மற்ற ஆசிரியர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். அப்போது ஹாஷிம் அதிவேகமாக காரை ஓட்டினார். ஆசிரியர்கள் அனுஜாவை போனில் அழைத்தபோது, அழுது கொண்டே அனுஜாவை துண்டித்துவிட்டார். அதன் பிறகு அவர்களின் அழைப்பை அவர் எடுக்கவில்லை.

இதையடுத்து அனுஜாவின் வீட்டிற்கு ஆசிரியர்கள் போன் செய்து அவரது தந்தை மற்றும் கணவருக்கு தகவல் தெரிவித்தனர். அப்போதுதான் அனுஜாவுக்கு விஷ்ணு என்ற உறவினர் இல்லை என்பதை உணர்ந்தனர்.

ஆசிரியர்கள் மீண்டும் அனுஜாவை அழைத்தபோது, ​​அனுஜா அழைப்பிற்கு பதிலளித்து தான் பாதுகாப்பாக இருப்பதாக கூறினார். பின்னர், ஆசிரியர்கள் அடூர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தனர்.

இதற்கிடையில், அனுஜாவின் தந்தை மற்றும் சகோதரர் காவல் நிலையம் வந்தனர். சிறிது நேரத்தில் ஹாசிம் ஓட்டிச் சென்ற கார் கண்டெய்னர் லொறியுடன் மோதியதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

நேரில் பார்த்தவர்களின் கூற்றுப்படி, கார் அதிவேகத்தில் சென்று மோதியது. தீயணைப்பு படையினர் மற்றும் அப்பகுதி மக்கள் உதவியுடன் காரை துண்டு துண்டாக வெட்டி அனுஜா மற்றும் ஹாஷிம் இருவரும் வெளியே எடுக்கப்பட்டனர். இதில் அனுஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடனடியாக அடூர் தாலுகா மருத்துவமனைக்கு ஹாஷிம் கொண்டு சென்ற போதிலும் அவரை காப்பாற்ற முடியவில்லை.

அனுஜாவுக்கும் ஹாஷிமுக்கும் இருந்த தொடர்பு குடும்பத்தினருக்குத் தெரியாது. ஹாஷிம் மூன்று வருடங்களாக மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வந்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தும் குழுவின் தலைவன் கைது!

Pagetamil

திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவர்களின் அசத்தல் சாதனை

east tamil

போதைப் பொருள் கடத்தல் வழக்கு: நடிகர் மன்சூர் அலிகான் மகனுக்கு நிபந்தனை ஜாமீன்

Pagetamil

நடிகர் அல்லு அர்ஜுனுக்கு மீண்டும் நோட்டீஸ்

Pagetamil

தமிழகத்தில் வாக்காளர் அதிகரிப்பு

Pagetamil

Leave a Comment