சிறுமிகளின் உடலுறவு வயதை குறைக்கும் சட்டமூலம் மீளப்பெறப்படும்

Date:

14 வயதுக்கும் 16 வயதுக்கும் இடைப்பட்ட சிறுமிகள் தமது விருப்பத்துடன் 22 வயதுக்குட்பட்ட ஒருவருடன் உடலுறவு கொண்டால் அதற்கான தண்டனையை குறைக்கும் வகையிலான சட்டமூலம் தொடர்பில் அண்மையில் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.

இந்த நிலையில், அரசாங்கத்தால் கொண்டுவரப்படவிருந்த குறித்த சட்டமூலத்தை மீளப்பெறுவதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ இன்று (23) தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“பெரும்பாலானோர் இந்த சட்டமூலத்தை நிறைவேற்றுவதை இடைநிறுத்துமாறு கோரினார். இது குறித்து தொடர்ந்து கலந்துரையாடப்பட வேண்டும் என அவர்கள் என்னிடம் தெரிவித்தனர். இந்த சட்டமூலம் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால் இதனை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டாம் என சட்டமா அதிபருக்கு அறிவித்தேன்.

மாறாக சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கலந்துரையாடப்படும். பாராளுமன்றத்திலும் இது மீளபெறப்படும்” என்றார்.

spot_imgspot_img

More like this
Related

பயங்கரவாதத் தடுப்புச் சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள்: உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை ஆரம்பம்…

அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள “அரசைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலம்” (Protection of...

ஊடகவியலாளர் நிமலராஜனின் 26ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாணத்தில்!

படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 26 ஆவது ஆண்டு...

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு அம்பாறை மாவட்டத்தில் ஏற்பாடு

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, அம்பாறை மாவட்டத்தில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்