சிறுமிகள் உடலுறவு வயதை குறைத்தமைக்கு பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு!

Date:

2024 பெப்ரவரி 9ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்பட்ட குற்றவியல் சட்டத்தின் 19ஆவது பிரிவைத் திருத்தும் சட்டமூலத்தை உடனடியாக வாபஸ் பெறுமாறு கோரி நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவுக்கு பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பேரவை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

1995 ஆம் ஆண்டு குற்றவியல் சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தங்களின்படி, 16 வயதுக்குட்பட்ட சிறுமிகள் சுதந்திரமாக உடலுறவு கொண்டாலும் கூட, பாலியல் பலாத்காரமாக கருதப்பட்டது. நீதி அமைச்சரால் முன்மொழியப்பட்ட குற்றவியல் சட்டத் திருத்தம் வயது வரம்பை 14 ஆக குறைக்கும். குற்றவியல் சட்டத்தின் 364வது பிரிவின் உத்தேச திருத்தம் குறித்து தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துவதாக பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பேரவைத் தலைவர் டொகக்டர்.சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார். சட்டப்பிரிவு 364 க்கு முன்மொழியப்பட்ட திருத்தங்கள் குறித்து அக்கறை கொள்ள வேண்டிய விஷயங்கள் தொடர்பான விவரங்கள் அவரது கடிதத்துடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவிக்கிறார்.

குற்றவியல் சட்டத்தின் 364வது பிரிவை திருத்த உத்தேசித்துள்ள மசோதாவை வாபஸ் பெறுமாறு பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேரவை சார்பில் வேண்டுகோள் விடுத்துள்ளார். பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து, பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு நீதியை நிலைநாட்டவும் பேரவை சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

இலங்கைக்கு பெருந்தொகை போதைப்பொருளை கடத்த முயன்ற விஜய் கட்சி பிரமுகர் சிக்கினார்!

இலங்கைக்கு கடத்துவதற்காக ரூ.135 கோடி மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் பதுக்கி வைத்திருந்த நாகையைச்...

‘மஹிந்தவுக்கு ஏவுகணை அடித்தால் எல்லாம் சரியாவிடும்’: எக்னொலிகொட வழக்கில் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் சாட்சியம்!

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில், ஜனாதிபதி பயணிக்கும் விமானத்தின் மீது...

ஷிராந்திக்கு பிணை!

‘சிரிலிய சவிய’ கணக்கு தொடர்பான விசாரணைகளுக்கு அமைய இலஞ்ச ஊழல் விசாரணை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்