2வது முறை சிக்கிய 19, 21 வயது யுவதிகளுக்கு விளக்கமறியல்

Date:

வெளிநாட்டில் உள்ள இரண்டு பிரபல பாதாள உலகக் கும்பல்களுக்கு போதைப்பொருள் விநியோகம் செய்து கொலன்னாவ மற்றும் வெல்லம்பிட்டிய பிரதேசங்களில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த இரு யுவதிகள் கொலன்னாவ சன்ஹிந்த செவன அடுக்குமாடி குடியிருப்பில் வைத்து ஐஸ் கபோதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

19 மற்றும் 21 வயதுடைய இந்த இரண்டு யுவதிகளும் இரண்டு மாதங்களுக்கு முன்னர் மேற்கு தெற்கு குற்றப் பிரிவினரால் ஒரு தொகை கேரள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

19 வயதுடைய யுவதியிடம் 520 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் இருந்ததும், 21 வயதுடைய யுவதியிடம் 90 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவர்களது வங்கிக் கணக்குகளில் பெறப்படும் பணம் இந்த வலையமைப்பில் உள்ள மேலும் இருவருக்கு வழங்கப்பட்டு அதனை உண்டியல் முறையின் மூலம் அவர்கள் வெளிநாட்டிலுள்ள இரு பாதாள உலக தலைவர்களுக்கு வழங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 20ஆம் திகதி கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் அளுத்கடை இலக்கம் 04 நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு பின்னர் தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் மேற்கு தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

யா/கோப்பாய் சரவணபவானந்தா வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழா நிகழ்வுகள் பாடசாலை மைதானத்தில் நேறறு நடைபெற்றது.

நூற்றாண்டு விழாவின் பிரதான நிகழ்வாக கலைநயத்துடன் உருவாக்கப்பட்ட பாடசாலை பிரதான நுழைவாயில்...

களுத்துறை யில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மட்டு ஆறுமுகத்தான் குடியிருப்பைச் சேர்ந்த ஒருவர் வாழைச்சேனையில் வைத்து கைது

களுத்துறை நாகொடாவில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்பட்ட ஏறாவூர் ஆறுமுகத்தான்...

இந்திய ஐரெக் பயிற்சிபெற்ற இலங்கையர்கள் அமைப்பு கொழும்பில் அங்குரார்ப்பணம் !

இந்தியா வெளிவிவகார அமைச்சின் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புத் திட்டத்தின் கீழ்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்