27 C
Jaffna
January 11, 2025
Pagetamil
இந்தியா

பக்கத்து வீட்டு இளம் ஜோடி ஜன்னலை திறந்து வைத்துவிட்டு உல்லாசம் அனுபவிக்கிறார்கள்: 44 வயது பெண் பொலிசில் முறைப்பாடு!

பக்கத்து வீட்டில் குடியிருக்கும் இளம் ஜோடி ஜன்னல்களை திறந்து வைத்துவிட்டு உல்லாசம் அனுபவித்து தொல்லை கொடுப்பதாக 44 வயதான பெண்ணொருவர் பொலிசில் புகார் கொடுத்துள்ளார். அந்த ஜோடியின் அந்தரங்க பேச்சும், உல்லாசத்தின் போதான முனகல் சத்தங்களும் அவர்களின் படுக்கையறையிலிருந்து கேட்கிறது, இது தனது வீட்டின அமைதியை குலைக்கிறது என முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு கிரிநகர் பொலிஸ் எல்லைக்கு உட்பட்ட பி.டி.ஏ. லே-அவுட்டில் 44 வயது பெண் வசித்து வருகிறார். இவரது வீட்டையொட்டி இளம் தம்பதி வசித்து வருகிறார்கள். இந்த தம்பதியின் படுக்கை அறை ஜன்னல், அந்த பெண் வீட்டின் முன்பக்க கதவின் முன்பாகவே அமைந்துள்ளது. இந்த நிலையில், அந்த தம்பதி தனது வீட்டின் படுக்கை அறையில் இரவிலும், பகலிலும் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.

அந்த சந்தர்ப்பத்தில் அவர்கள் ஜன்னல் கதவை திறந்து வைத்து கொண்டு லூட்டி அடித்ததுடன், கிளுகிளுப்பான உரையாடலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. தம்பதியின் களியாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருந்துள்ளது. காது கொடுத்து கேட்க முடியாத அளவுக்கு தம்பதி பேசிய ஆபாச பேச்சுகளால், பக்கத்து வீட்டு பெண் தனது வீட்டின் முன்பகுதிக்கு செல்ல முடியாத அளவுக்கு தொல்லையை அனுபவித்து வந்துள்ளார்.

தம்பதியின் களியாட்டத்தை பொறுத்துக்கொள்ள முடியாத அந்த பெண் பொங்கி எழுந்து, நேரடியாக தம்பதியிடமே இதுபற்றி கூறியுள்ளார். அதாவது படுக்கை அறையில் உள்ள ஜன்னல் கதவை அடைத்து விட்டு நீங்கள் எப்படி வேண்டுமானாலும் இருந்து கொள்ளுங்கள் என அவர் கூறியுள்ளார்.

ஆனால் அந்த பெண்ணின் வார்த்தைகளை அந்த தம்பதி ஒரு பொருட்டாக கண்டுகொள்ளவில்லை. தினந்தோறும் தம்பதி தங்களது பாணியிலேயே மன்மத லீலையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதன் காரணமாக அடிக்கடி தம்பதி மற்றும் பெண் இடையே வாக்குவாதமும் ஏற்பட்டு வந்துள்ளது.  வாக்குவாதம் முற்றி, அந்த பெண்ணை பாலியல் வல்லுறவுக்குளாக்கி கொன்று விடுவோம் என அந்த ஜோடி மிரட்டியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக கிரிநகர் போலீஸ் நிலையத்தில் அந்த பெண், தம்பதி மீது ஒரு புகார் அளித்துள்ளார்.

அதில், தம்பதி தனது வீட்டின் படுக்கை அறை ஜன்னல் கதவை திறந்து வைத்து உல்லாசம் அனுபவிக்கிறார்கள். அது தனக்கு முகம் சுளிப்பை தருகிறது. நான் பல முறை கூறியும் கேட்பதில்லை. மாறாக தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி கூறி இருந்தார்.

புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

விடுதலைக்காக சொத்தை விற்றவர் வஉசி; சொத்துக்காக திருமணம் செய்தவர் பெரியார் – சீமான் ஆவேசம்

Pagetamil

இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தும் குழுவின் தலைவன் கைது!

Pagetamil

திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவர்களின் அசத்தல் சாதனை

east tamil

போதைப் பொருள் கடத்தல் வழக்கு: நடிகர் மன்சூர் அலிகான் மகனுக்கு நிபந்தனை ஜாமீன்

Pagetamil

நடிகர் அல்லு அர்ஜுனுக்கு மீண்டும் நோட்டீஸ்

Pagetamil

Leave a Comment