பல்கலைகழக மாணவன், கொடிகாமம் வியாபாரிகள்: வடக்கில் இன்று தொற்றிற்குள்ளானவர்கள் விபரம்!

Date:

வடக்கில் இன்று அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் பற்றிய விபரம் வெளியாகியுள்ளது. இன்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் வடக்கை சேர்ந்த 19 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

இன்று யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாண பல்கலைகழக மருத்துவபீட ஆய்வுகூடங்களில் 760 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.

இதில் கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 5 பேர் அடையாளம் காணப்பட்டனர். இதில் 4 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள். ஒருவர் கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் கல்வி கற்கும் திருகோணமலையை சேர்ந்தவர்.

சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 4 பேர் அடையாளம் காணப்பட்டனர். இவர்கள் கொடிகாமம் சந்தை, வர்த்தக நிலையங்களில் பணிபரிபவர்கள்.

நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த இருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார்.

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கும் தொற்று உறுதியானது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட யாழ்ப்பாண பல்கலைகழக சட்டத்துறை மாணவன் ஒருவருக்கு தொற்று உறுதியானது.

வவுனியா வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்ட இருவர், கிளிநொச்சி, முல்லைத்தீவு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட தலா ஒவ்வொருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

இருவர் தனிமைப்படுத்தல் முகாம்களை சேர்ந்தவர்கள்.

spot_imgspot_img

More like this
Related

விஜய்யை ஆதரித்ததற்கு மன்னிப்பு கேட்ட நடிகை

தமிழ்நாட்டில் தவெக ஆட்சியில் மின்சாரம் தொடர்பான பிரச்சனை தொடர்ந்து கொண்டே வருகிறது....

வவுனியா விபத்தில் ஒருவர் பலி

வவுனியா சூடுவெந்தபிலவிற்கு அண்மித்த பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர்...

நீதிபதிகளின் ஓய்வு வயது அதிகரிப்புக்கு பௌத்தபீடங்களும் எதிர்ப்பு

உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பதற்காக முன்மொழியப்பட்ட அரசியலமைப்பின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்