தங்கக்கடத்தல் எம்.பியை பதவிநீக்க இடைக்கால தடை!

Date:

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் அப்துல் ரஹீம் அலி சப்ரியை கட்சியில் இருந்தும், பாராளுமன்ற உறுப்புரிமையிலிருந்தும் நீக்குவதைத் தடுக்கும் வகையில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அலி சப்ரி தாக்கல் செய்த முறைப்பாட்டினை பரிசீலித்த கொழும்பு மாவட்ட நீதிபதி சந்துன்விதான இன்று (07) அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் றிசாத் பதுர்தீன், காங்கிரஸின் செயலாளர் சுபைர்தீன் மற்றும் ஐக்கிய தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எம்.நைனாமுல்லா ஆகியோருக்கு அழைப்பாணை விடுத்துள்ளார்.

2023 ஆம் ஆண்டு நவம்பர் 5 ஆம் திகதி வெளியிடப்பட்ட வெளியேற்றக் கடிதத்தை நடைமுறைப்படுத்துவதைத் தடுக்கும் வகையில் இந்த இடைக்காலத் தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சுங்கம் மற்றும் பிற சட்டங்களை மீறி நாடாளுமன்ற உறுப்பினருக்குப் பொருந்தாத நடத்தையில் ஈடுபட்டதன் மூலம் கட்சி ஒழுக்கம் கடுமையாக மீறப்பட்டுள்ளதால் ஒழுக்காற்று நடவடிக்கையெடுப்பதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

வழக்கில் இறுதி முடிவு எடுக்கப்படும் வரை இடைக்கால தடை நடைமுறையில் இருக்கும்.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி இராணுவ பாதுகாப்பு மோட்டார்சைக்கிள் இராணுவ ரோந்து நடவடிக்கையடுத்து – பரபரப்பு

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் பொலிசார் இணைந்து...

சம்மாந்துறையில் கட்டாக்காலி மாடுகள் பிடிப்பு : போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்த மாடுகளுக்கு எதிராக பிரதேச சபை – பொலிஸார் இணைந்து நடவடிக்கை

பொதுப் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்து, தொடர்ச்சியாக வீதி விபத்துகளுக்கும் விவசாயப் பயிர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்