ஈரான் கப்பலுக்கு எச்சரிக்கை விடுத்த அமெரிக்க கடற்படை..

Date:

பாரசீக வளைகுடா கடல் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க போர் கப்பலுக்கு மிக நெருக்கமாக ஈரானின் துணை ராணுவ படையினரின் கப்பல் வந்ததால் அமெரிக்க கடற்படை துப்பாக்கியால் சுட்டு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேற்கு ஆசியாவில் அமைந்துள்ள பாரசீக வளைகுடா கடல் பகுதியில் ரோந்துப் பணியில் அமெரிக்க போர் கப்பல் ஈடுபட்டு இருந்தது. அப்போது, மேற்காசிய நாடான ஈரானின் துணை ராணுவ புரட்சி படைக்கு சொந்தமான ரோந்து கப்பல் அமெரிக்க கப்பலுக்கு 200 அடி துாரத்தில் நெருங்கி வந்தது.

இதனால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதால், இது குறித்து அமெரிக்க கப்பல் படையினர், ரேடியோ வாயிலாகவும், ஒலிபெருக்கி உதவியுடனும் எச்சரிக்கை விடுத்தனர். அதையும் பொருட்படுத்தாமல் ஈரான் நாட்டு கப்பல் நெருங்கி வந்ததை அடுத்து எச்சரிக்கை விடுக்கும் விதமாக துப்பாக்கியால் சுட்டனர்.

இதனையடுத்து ஈரான் கப்பல் விலகி சென்றது. இது தொடர்பான, வீடியோ காட்சிகளை அமெரிக்க கடற்படை வெளியிட்டது. ‘இது போல பாதுகாப்பற்ற முறையில் ஈரான் படையினர் கப்பலை இயக்குவது சமீபத்தில் இது இரண்டாவது முறை’ என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

கிளிநொச்சியில் பிளாஸ்டிக் துப்பாக்கியுடன் மே தினத்திற்கு வந்தவர் கைது!

மே 1 அன்று கிளிநொச்சி டிப்போ சந்திக்கு அருகே நடைபெற்ற மே...

மனவைி விவகாரத்து கோரியதனால்  கோபத்தில்  தென்னைகளை வெட்டி வீழ்த்திய கணவன்

கிளிநொச்சி செல்வாநகர் பகுதியில் மூன்று பெண் பிள்ளைகளின் தாயான பெண்ஒருவர் தனது...

கறிவேப்பிலை பறித்தவர் உயிரிழந்தார்

யாழ்ப்பாணத்தில் நேற்று (01) கறிவேப்பிலை பறிப்பதற்காக மரத்தில் ஏறியவர் தவறி கீழே...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்