Pagetamil
இலங்கை

யாழில் பூட்டிய வீட்டுக்குள் குடும்பம் நடத்திய 15 வயது மாணவியும், 17 வயது மாணவனும்!

பூட்டப்பட்ட வீட்டுக்குள் 15 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்திய 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

வீடு உடைத்து இருவரும் வெளியே அழைக்கப்பட்டு, சிறுவன் கைது செய்யப்பட்டான்.

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில் இநத சம்பவம் நடந்தது.

இந்த சிறுவன் 14ஆம் திகதி இரவு காணாமல் போயிருந்தார். மறுநாள் சிறுவனின் பெற்றோர் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர். அத்துடன், சிறுவனை தேடி வந்தனர்.

15 வயது சிறுமியுடன் தலைவறைவான இளைஞன், சுழிபுரம்- நெல்லியானில் உள்ள சிறுமியின் சகோதரியின் வீட்டில் தங்கியுள்ளதாக, சிறுவனின் பெற்றோருக்கு தகவல் கிடைத்தது.

சிறுவனின் பெற்றோர் அங்கு சென்ற போது, வீட்டு உரிமையாளர்களான சிறுமியின் சகோதரி குடும்பத்தினர் அங்கிருக்கவில்லை. வீடு பூட்டியிருந்தது.

வீட்டுக்குள் சிறுவனும், சிறுமியும் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் வீட்டை உடைத்து உள்நுழைந்த போது, அங்கு சிறுவனும், சிறுமியும் இருந்துள்ளனர்.

தேடிச் சென்றவர்கள் சிறுவனை அழைத்துக் கொண்டு சென்றுவிட்டனர்.

இதை தொடர்ந்து, சிறுமியின் தரப்பிலிருந்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. சிறுவனை கைது செய்த பொலிசார் நீதிமன்றத்தில் முற்படுத்தினர்.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
3
+1
0
+1
0
+1
2

இதையும் படியுங்கள்

முன்னாள் தலைவர்களின் வெளிநாட்டு பயண செலவுகள்

east tamil

‘சிறைக்குள் வீட்டுச்சாப்பாடு கிடைக்கவில்லை’: ஞானசாரரின் சோக்கதை!

Pagetamil

கோட்டாவின் மந்திரவாதி ஞானாக்காவுக்கு ரூ.280 மில்லியன் இழப்பீடு!

Pagetamil

யாழ் போதனா வைத்தியசாலை தாதியர் போராட்டம்

Pagetamil

தொடருந்து சாரதிகள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை

east tamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!