தனது மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் நபர் ஒருவரை அம்பன்பொல பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அம்பன்பொல – குகுலேவ பிரதேசத்தை சேர்ந்த ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் புகையிரத திணைக்களத்தில் வீதிப் பணி உதவியாளராக கடமையாற்றி வருவதுடன், கடந்த 11ஆம் திகதி தனது தந்தை வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக 15 வயதுடைய மகள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
அந்த முறைப்பாட்டின் பிரகாரம் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதாக கூறப்படும் சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக அம்பன்பொல பிரதேச வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பன்பொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



