3 யுவதிகளுடன் சிவில் உடையில் உல்லாசப்பயணம் சென்ற பிக்குவுக்கு மக்கள் எதிர்ப்பு!

Date:

அளுத்கம, வெலிப்பன்ன பிரதேசத்திலுள்ள விகாராதிபதியொருவர் சிவில் உடையில் 3 இளம் யுவதிகளுடன் தேரர் லுணுகம்வெஹர மற்றும் திஸ்ஸமஹாராம பிரதேசங்களுக்கு உல்லாசமாக சுற்றுலா சென்ற போது பொதுமக்களல் பிடிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து, அவர் தங்கியிருந்த விகாரையில் பொதுமக்கள் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் விகாராதிபதி அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

அளுத்கம வெலிபன்ன தெற்கு அதிவேக நெடுஞ்சாலைஈ வெலிப்பன்ன பொலிஸ் பிரதேசத்தில் அமைந்துள்ள விகாராதிபதி சிவில் உடை அணிந்து மூன்று இளம்  யுவதிகளுடன் கதிர்காமம் லுனுகம் வெஹெர திஸ்ஸமஹாராம பிரதேசத்திற்கு உல்லாச சுற்றுலா சென்றுள்ளார்.

அதே நாளில், மேற்கூறிய பகுதிகளுக்கு சுற்றுலா சென்ற, வெலிப்பன்ன பகுதி இளைஞர்கள் குழுவொன்று, 3 யுவதிகளுடன் பிக்கு “ஆன்மீக சுற்றுலா“ செல்வதை கண்டு அதிர்ச்சியடைந்து, அவர்களை வீடியோ எடுத்தனர். அதை முகநுல்களிலும் பதிவிட்டனர்.

உல்லாச பயணத்தை முடித்துக் கொண்டு பிக்கு விகாரைக்கு திரும்பிய போது, கடந்த 29ஆம் திகதி இரவு விகாரை முன்றலில் பெருமளவான மக்கள் திரண்டு பிக்குவுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவர் விகாரையை விட்டு வெளியேறினார்.​

spot_imgspot_img

More like this
Related

ஈரானுடனான ஒப்பந்தம் நெருங்கி விட்டது!

அமெரிக்காவும் ஈரானும் இன்னும் இறுதிக் கட்டத்தை எட்டவில்லை, ஆனால் தங்கள் மோதலைத்...

டெங்கு உயர் ஆபத்து மாவட்டமாக கொழும்பு அறிவிப்பு; ஒரு வார விசேட கட்டுப்பாட்டு நடவடிக்கை

டெங்கு அபாயம் அதிகரிப்பு: கொழும்பில் ஒரு வார விசேட கட்டுப்பாட்டு நடவடிக்கை கொழும்பு...

அமெரிக்கா–ஈரான் அமைதி ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமை கையெழுத்தாகுமா? உலகம் முழுவதும் எதிர்பார்ப்பு

ஜெனீவாவில் முக்கிய சந்திப்பு; ஹோர்முஸ் நீரிணை திறப்பு, பொருளாதார தடைகள் நீக்கம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்