ரிஷாத் பதியூதீனை விடுவிக்க கோரி போராட்டம்!

Date:

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதீனை விடுதலை செய்யுமாறு கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக குறித்த ஆர்ப்பாட்டம் இன்று (28) காலை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த ஆர்பாட்டகாரர்கள்-

ரிஷாத்பதியூதீனை அதிகாலையில் சென்று கைது செய்யப்பட்டதையிட்டு வேதனையடைகின்றோம். பாராளுமன்ற உறுப்பினரான அவரை கைதுசெய்வதாக சபாநாயகருக்கு கூட அறிவித்தல் விடுக்கப்படவில்லை. அவரது கைதுக்கு வன்மையாக கண்டனங்களை தெரிவிக்கின்றோம். அரசாங்கம் தன்னுடைய தோல்வியை மறைப்பதற்காக இவ்வாறான கைதுகளை முன்னெடுத்து வருகின்றது.

சிறுபான்மை சமூகங்களிற்கு முன்னெடுக்கப்படும் அநீதிகளிற்கெதிராக வீதியில் இறங்கியே நாம் போராட வேண்டியுள்ளது. எனவே எமது தலைவரை விடுவிக்காத பட்சத்தில் நாடளாவிய ரீதியில் எமது போராட்டங்கள் தொடர்ந்து கொண்டிருக்கும் என்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அரசுக்கு ஆதரவு வழங்காததற்கா இந்த கைது, சிறுபான்மை தலைமையை விடுதலைசெய், உண்மையான சூத்திரதாரிகளை கைதுசெய், அரசே பழிவாங்காதே போன்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்தியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.

இதன்போது வவுனியா நகரசபையின் தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினரான ரி.கே. இராசலிங்கம், இகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்களான ஏ.ஆர்.எம்.லரிப், அப்துல் பாரி உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

spot_imgspot_img

More like this
Related

வெனிசுலா நிலநடுக்க உயிரிழப்பு 3,500ஐ கடந்தது!

வெனிசுலாவின் இரட்டை நிலநடுக்கங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,535 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள்...

நீர்கொழும்பு சிறைக்கலவரம்: துப்பாக்கிகளை பறித்து சுட்ட கைதிகள்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவம் குறித்து முறையான மற்றும் விரிவான...

சாவகச்சேரி உபதவிசாளர் விவகாரம்: இடைக்கால கட்டளைக்கு நீதிதன்றம் மறுப்பு

சாவகச்சேரி நகராட்சி மன்றம் உப தவிசாளர் மற்றும் சபையின் உறுப்புரிமையிலிருந்து தன்னை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்