24.6 C
Jaffna
January 26, 2025
Pagetamil
இந்தியா

கூடா நட்பால் மனைவியே கணவரை கொலை செய்த வழக்கில் திருப்பம்; கூலிப்படைக்கு ரூ.5 லட்சம் பேரம்

கூடா நட்பில் மனைவியே கணவரை கூலிப்படை ஏவி கொலை செய்த வழக்கில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை, அயனாவரம், தந்தை பெரியார் மெயின் ரோடு பகுதியில் வசித்தவர் பிரேம்குமார் (38). இவர், வில்லிவாக்கத்தில் பழைய பேப்பர் கடை நடத்தி வந்தார். இவர் கடந்த 2ஆம் தேதி அதிகாலை அயனாவரம், நியூ ஆவடி சாலை, ஆர்டிஓ அலுவலகம் அருகில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த கார் மோதி இறந்தார்.

இதுகுறித்து அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் விபத்து மரணம் என்ற பிரிவில் வழக்கு பதிந்து விசாரித்தனர். இந்நிலையில், தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், பிரேம்குமார் விபத்தில் இறக்கவில்லை. அவரது மனைவி சன்பிரியா இளைஞர் ஒருவருடன் ஏற்பட்ட கூடா நட்பில் கூலிப்படை மூலம் கார் ஏற்றி கணவரை கொலை செய்தது தெரியவந்தது. இது தொடர்பாக கூடா நட்பில் இருந்த அயனாவரம் செட்டித் தெருவைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன் (30) என்பவர் கைது செய்யப்பட்டார்.

ரூ.5 லட்சம் பேரம் பேசி, கார் ஏற்றி கொலை செய்த ஹரிகிருஷ்ணனின் நண்பரான ஆந்திராவைச் சேர்ந்த சரத்குமாரை (27) தேடிவந்த நிலையில் அவர் கோவையில் பிடிபட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். பிரேம்குமாரின் மனைவியையும் போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் கொலை தொடர்பாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. கொலையான பிரேம்குமாருக்கு 14 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது. அதிகாலை கடைக்கு செல்லும் அவர் தினமும் இரவு வீடு திரும்புவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். அவர்களும் காலையில் பள்ளிக்கு சென்று மாலையில் வீடு திரும்புவர்.

இந்த இடைப்பட்ட நேரத்தில்தான் பட்டதாரியான, திருமணம் ஆகாத ஹரிகிருஷ்ணனின் நட்பு சன்பிரியாவுக்கு கிடைத்துள்ளது. வீட்டில் யாரும் இல்லாததால், பகல் முழுவதும் ஹரிகிருஷ்ணனுடன் போன் மூலம் தொடர்பில் இருந்துள்ளார். தனிமையிலும் சந்தித்து வந்துள்ளனர். இந்த விவகாரம் பிரேம்குமாருக்கு தெரியவர மனைவியை கண்டித்துள்ளார்.

இதையடுத்து தங்கள் உறவுக்கு இடையூறாக இருக்கும் பிரேம்குமாரை கொலை செய்ய இருவரும் முடிவு செய்துள்ளனர். இதற்காக ஹரிகிருஷ்ணனின் நண்பர் ஆந்திராவை சேர்ந்த கார் ஓட்டுநர் சரத்குமாரை தொடர்பு கொண்டு ரூ.5 லட்சம் தருவதாக கூறி கொலை செய்ய திட்டம் வகுத்து கொடுத்துள்ளனர்.

இதற்காக பழைய கார் ஓன்றைரூ.65 ஆயிரத்துக்கு வாங்கி உள்ளனர். அந்த காரை சம்வத்தன்று சரத்குமார் ஓட்டிச் சென்று பிரேம்குமார் மீது மோதி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் விபத்துபோல் இருக்க வேண்டும்என்பதற்காக சம்பவ இடத்தில்காரை அங்கேயே விட்டுவிட்டு பின்னால் தயாராக இருசக்கரவாகனத்தில் வந்த ஹரிகிருஷ்ண னுடன் தப்பி உள்ளார்.

முன்னதாக பழைய காரை வாங்க செல்லும்போது அடையாளம் தெரியாமல் இருக்க ஹரிகிருஷ்ணன் மற்றும் சரத்குமார் இருவரும் மாறுவேடத்தில் சென்றுள்ளனர்.

மேலும், ஹரிகிருஷ்ணன் பெயரில் காரின் பதிவெண்ணை மாற்றவில்லை. ஏற்கெனவே 4 பேர் கார் உரிமையாளர்களாக இருந்துள்ளதால் யார் உண்மையான உரிமையாளர் என கண்டுபிடிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும், கைதான ஹரிகிருஷ்ணன் செல்போனை வாங்கி பார்த்தபோது அவர் சன்பிரியாவுடன் அதிகமுறை போனில் பேசி இருந்தது தெரியவந்தது.

அதன் பிறகே சன்பிரியா இந்தவழக்கில் தொடர்பில் இருந்தஅதிர்ச்சித் தகவல் வெளியானது. இந்த வழக்கு அயனாவரம் போலீஸாரிடம் ஒப்படைக் கப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய பெயரில் பலகோடி மோசடி

east tamil

மஹா கும்பமேளாவில் மீண்டும் தீ

east tamil

துறவறத்துக்கு மாறிய நடிகை

Pagetamil

கட்சி தொடங்கியதுமே சிலர் ஆட்சிக்கு வர துடிக்கின்றனர்: விஜய் பற்றி முதல்வர் ஸ்டாலின் மறைமுக விமர்சனம்

Pagetamil

மகாராஷ்டிராவில் ரயில் விபத்து: 12 பேர் உயிரிழப்பு, 40 பேர் காயம்

east tamil

Leave a Comment