26.5 C
Jaffna
February 6, 2025
Pagetamil
இலங்கை

PickMe முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு அச்சுறுத்தல்… முறைப்பாட்டையும் ஏற்கவில்லை!

ஆட்டோ சாரதிகளுக்கு இக்கட்டான சூழல் ஏற்பட்ட போது நாங்கள் நீதியை பெறுவதற்காக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கச் சென்ற சமயத்தில் எங்களுடைய முறைப்பாடு ஒருதலைப்பட்சமாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்று கவலையுடன் PickMe சாரதிகள் ஒன்றியத்தின் தலைவர் அ.கலைச்செல்வன் தெரிவிப்பு.

யாழ்.ஊடக அமையத்தில் நேற்று (03) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மக்கள் சேவையில் ஈடுபடும் போது தொடர்ந்து இடையூறுகளை ஏற்படுத்தி வருகின்றனர். இந்த விடயத்தில் பொலிஸ்மா அதிபரின் கவனத்துக்கு கொண்டு சென்றும் நீதி கிடைக்கவில்லை.

யாழ்.மாவட்ட முச்சக்கர வண்டி சாரதிகள் சங்க உறுப்பினர்களுக்கு இடையூறு இன்றி சிறந்த சேவையை வழங்குங்கள் என்று எங்களுடைய சாரதிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம். அவர்களும் மக்கள் சேவையை சிறப்பாக செய்து வருகின்றனர்.

இருவேறு சந்தர்ப்பங்களில் PickMe சாரதிகளுக்கு இக்கட்டான சூழல் ஏற்பட்ட போது நாங்கள் நீதியை பெறுவதற்காக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்க சென்ற சமயத்தில் எங்களுடைய முறைப்பாடு ஒருதலைப்பட்சமாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

இதனால் தலைமை ஒருங்கிணைப்பாளரிடம் அறிவித்து பொலிஸ்மா அதிபரிடம் அறிவித்தும் இன்று வரைக்கும் நீதிகிடைக்காமல் விசாரணை முற்றுப்பெறாமல் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது.

இந்த சேவையை எந்தவித தங்குதடையுமின்றி பாதுகாப்புடன் நேர்த்தியான முறையில் செய்வதற்கு யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர், யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர், வடபிராந்திய பொலிஸ்மா அதிபர் ஏற்பாடு செய்து தரவேண்டும்.

நல்லூர்ப் பகுதியில் நேற்றும் கூட எமக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த செயற்பாடுகளை வன்மையாக கண்டிக்கிறோம். தொடர்ந்தும் இந்த நிலைமை ஏற்படாமல் உரிய பாதுகாப்பு ஏற்பாட்டுகளுடன் மக்களுக்கு இலகுவான சேவையை செய்வதற்கு வழியை ஏற்படுத்தித் தருமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அரச வேலைவாய்ப்புகள் என்ற போர்வையில் தகவல் திருட்டு

east tamil

இன்று முதல் உத்தரவாத விலையில் நெல் கொள்வனவு

east tamil

இலங்கையில் விரைவில் சூரிய மின்னுற்பத்தி

east tamil

கம்மன்பிலவின் கவலைகளின் பின்னணி என்ன?

Pagetamil

மத்தள விமான நிலையத்தால் தொடரும் நட்டம்

east tamil

Leave a Comment