‘பொக்சிங் டே’ டெஸ்ட் போட்டி என்றால் என்ன?

Date:

கிறிஸ்மஸ் தினத்துக்கு மறுநாள் தொடங்கும் டெஸ்ட் போட்டி ‘பொக்சிங் டே’ என்று பரவலாக அழைக்கப்படுகிறது. இன்று அவஸ்திரேலியா- பாகிஸ்தான், இந்தியா- தென்னாபிரிக்க அணிகள் பொக்சிங் டே டெஸ்ட் போட்டியில் மோதுகின்றன. இந்த ‘பொக்சிங் டே’ டெஸ்ட் போட்டி என்று பெயர் வருவதற்கு பல்வேறு சுவாரஸ்யமான வரலாறுகள் உண்டு.

இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து, தென்னாபிரிக்கா, கனடா போன்ற நாடுகளில் கிறிஸ்மஸ் பண்டிகை தினத்தில் கிறிஸ்தவ தேவாலயங்கள் முன் பெரிய பெட்டி (பொக்ஸ்) வைக்கப்பட்டிருக்கும். தேவாலயத்துக்கு வருபவர்கள் அதில் தங்களால் முடிந்த பணம் உள்ளிட்டவற்றை நன்கொடையாக செலுத்துவார்கள். மறுநாள் டிசம்பர் 26ஆம் திகதி அன்று அந்த பெட்டியைப் பிரித்து அதில் உள்ள பணம், பொருட்களை ஏழை எளிய மக்களுக்கும், வறுமையில் உள்ளவர்களுக்கும் வழங்குவர். இவ்வாறு பெட்டியைத் திறக்கும் நாளைத்தான் அங்கு ‘பொக்சிங் டே’ என்று அழைக்கின்றனர்.

தங்களிடம் வேலை செய்யும் தொழிலாளர்கள் கிறிஸ்மஸ் சீசனில் குடும்பத்தினரை பார்க்க செல்லும் போது அவர்களது முதலாளிகள் சிறப்பு பரிசாக கிறிஸ்மஸ் பொக்ஸ் வழங்கும் பழக்கம் முந்தைய காலங்களில் இருந்தே இருந்து வருகிறது. இதன் அடையாளமாகவும் இந்த ‘பொக்சிங் டே’ பெயர் வந்ததாக கூறப்படுகிறது.

எனவே, அன்றைய தினத்தில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளை பொக்சிங் டே போட்டி என்று அழைக்கின்றனர். அவுஸ்திரேலியாவில் ‘பொக்சிங் டே’ தினத்தில் ஏதாவது ஒரு விளையாட்டுப் போட்டி கண்டிப்பாக சர்வதேச அளவில் நடைபெறும். இதேபோல் நியூஸிலாந்து, தென்னாபிரிக்கா போன்ற நாடுகளிலும் பொக்சிங் டே அன்று ஏதாவது ஒரு சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெறும்.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பில் வறட்சி காரணமாக நாளை முதல் 4 மணி நேர நீர் வெட்டு மாவட்ட பிராந்திய முகாமையாளர் எந்திரி எஸ். ஜயந்தன் அறிவிப்பு

எல் நினோ காலநிலையினால் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் நாளை...

முல்லைத்தீவு இ.போ.ச சாலைக்குள் நடந்த அகோர சம்பவம்!

இலங்கை போக்குவரத்துசபையின் முல்லைத்தீவுச்சாலை உதவி முகாமையாளரான பிரதீஸ்குமார் என்பவர், கடமை நேரத்தில்...

யாழ் கோயில் திருவிழாவில் அதிசக்தி மின்விளக்குகள்: கண் பாதிப்பால் 25 பேர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதி!

பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகன் ஆலயத் திருவிழாவின் போது ஏற்பட்ட கண் பாதிப்புச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்