‘அந்தக் கருத்துக்காக தலைநிமிர்ந்து நடக்கலாம்’: கவாஜாவுக்கு கப்டன் கம்மின்ஸ் ஆதரவு

Date:

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர் உஸ்மான் கவாஜா ‘எல்லா உயிர்களும் சமம்’ வாசகம் கொண்ட காலணி அணிந்து விளையாடும் விஷயத்தில் அவருக்கு முழு ஆதரவு தருவதாக அந்த அணியின் கப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

உஸ்மான் கவாஜா பாலஸ்தீன் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், ‘எல்லா உயிர்களும் சமம்’ என்கிற வாசகம் அமைதியை போதிக்கும் புறா புகைப்படத்தையும் கொண்ட காலணியை அணிந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். ஆனால், இச்செயல் விதிமுறைகளுக்கு புறம்பானது எனக் கூறி இதுபோன்ற வாசகங்கள் அணிந்து விளையாட கவாஜாவுக்கு ஐசிசி தடை விதித்துள்ளது.

ஐசிசி விதிமுறைகளின்படி அரசியல் மற்றும் மதம் சம்பந்தமான வாசகங்கள் வீரரின் சீருடையில் எங்கும் பொறிக்கப்பட்டிருக்கக் கூடாது. ஆனால், கவாஜா இதனை ஏற்கவில்லை. அவர் தன் சமூக ஊடகப் பதிவில் தன் எதிர்ப்பைப் பதிவு செய்யும் போது, “சுதந்திரம் மனித உரிமை மேலும் அனைத்து உரிமைகளும் சமமே. இந்த நம்பிக்கையை நான் கைவிடுவதாக இல்லை, உறுதியாக இருக்கிறேன்” என்று பதிவிட்டு ஐசிசிக்கு சவால் விடுத்துள்ளார்.

இதனிடையே, கவாஜாவுக்கு அவுஸ்திரேலிய அணி கப்டன் பாட் கம்மின்ஸ் ஆதரவு தெரிவித்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான பொக்சிங் டே டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த கம்மின்ஸ் இதுதொடர்பாக பேசுகையில், “கவாஜா, தனது நம்பிக்கையில் வலுவாக நிற்கிறார். அவர் மரியாதையான முறையில் தான் அனைத்து செயல்களையும் செய்கிறார் என நினைக்கிறேன். அவரை நாங்கள் ஆதரிக்கிறோம். அனைத்து உயிர்களும் சமம் எனச் சொல்வது, அவ்வளவு புண்படுத்தும்படியான கருத்து ஒன்றும் இல்லை. இக்கருத்தை பேசுவதற்காக கவாஜா தலைநிமிர்ந்து நடக்கலாம். ஆனால், ஐசிசி சில விதிமுறைகளை வகுத்துள்ளன. எனவே அவர்கள் இதை அங்கீகரிக்கப் போவதில்லை. ஐசிசியின் விதிமுறைகளுக்கு நாம் இணங்கிதான் செல்ல வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பில் வறட்சி காரணமாக நாளை முதல் 4 மணி நேர நீர் வெட்டு மாவட்ட பிராந்திய முகாமையாளர் எந்திரி எஸ். ஜயந்தன் அறிவிப்பு

எல் நினோ காலநிலையினால் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் நாளை...

முல்லைத்தீவு இ.போ.ச சாலைக்குள் நடந்த அகோர சம்பவம்!

இலங்கை போக்குவரத்துசபையின் முல்லைத்தீவுச்சாலை உதவி முகாமையாளரான பிரதீஸ்குமார் என்பவர், கடமை நேரத்தில்...

யாழ் கோயில் திருவிழாவில் அதிசக்தி மின்விளக்குகள்: கண் பாதிப்பால் 25 பேர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதி!

பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகன் ஆலயத் திருவிழாவின் போது ஏற்பட்ட கண் பாதிப்புச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்