உடுத்துறையில் சுனாமி நினைவஞ்சலி!

Date:

இலங்கையில் ஆயிரக்கணக்கான மக்களின் உயிர்களை காவு கொண்ட ஆழிப்பேரலையின் 19 ஆம் ஆண்டு நினைவேந்தல் உணர்வுபூர்வமாக யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கில் இடம்பெற்றது.

உடுத்துறை சுனாமிப் பொது நினைவாலயத்தில் உடுத்துறை கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் ஏற்பாட்டில் நினைவேந்தல் இடம்பெற்றது.

சுனாமியால் உயிரிழந்தவர்களுக்காக அமைக்கப்பட்ட தூபிக்கு மாலை அணிவிக்கப்பட்டு 9.25 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டது.

முன்னராக இலங்கை தேசிய கொடியை மருதங்கேணி பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி ஏற்றிவைத்தார்.

பொதுச்சுடரை மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரபாகரமூர்த்தி ஏற்றி வைத்தை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் புகைப்படங்களுக்கு மாலையிட்டு தீபங்கள் ஏற்றி உணவுகளை படைத்து உறவினர்கள் அஞ்சலித்தனர்.

இதன்போது பெருமளவான பொதுமக்கள்,மதகுருமார்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் கலந்துகொண்டதுடன் உறவினர்கள் உயிரிழந்தவர்களை நினைத்து கண்ணீர் மல்கினர்.

கடந்த 2004 டிசம்பர் 26ம் திகதி ஏற்பட்ட சுனாமி ஆழிப்பேரலை பேரனர்த்தம் காரணமாக பல்லாயிரம் பொதுமக்கள் உயிரிழந்ததுடன் பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களும் அழிந்தமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பில் வறட்சி காரணமாக நாளை முதல் 4 மணி நேர நீர் வெட்டு மாவட்ட பிராந்திய முகாமையாளர் எந்திரி எஸ். ஜயந்தன் அறிவிப்பு

எல் நினோ காலநிலையினால் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் நாளை...

முல்லைத்தீவு இ.போ.ச சாலைக்குள் நடந்த அகோர சம்பவம்!

இலங்கை போக்குவரத்துசபையின் முல்லைத்தீவுச்சாலை உதவி முகாமையாளரான பிரதீஸ்குமார் என்பவர், கடமை நேரத்தில்...

யாழ் கோயில் திருவிழாவில் அதிசக்தி மின்விளக்குகள்: கண் பாதிப்பால் 25 பேர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதி!

பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகன் ஆலயத் திருவிழாவின் போது ஏற்பட்ட கண் பாதிப்புச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்