27.8 C
Jaffna
January 23, 2025
Pagetamil
இந்தியா

‘நிதிஷ், லாலு இதை ஏற்றுக்கொள்கிறார்களா?’- இந்தி பேசுபவர்கள் பற்றிய தயாநிதி மாறன் பேச்சு குறித்து பாஜக சாடல்

உத்தரப் பிரதேசம், பிஹாரில் இருந்து தமிழகத்துக்கு வரும் இந்தி பேசுபவர்கள் இங்கே சாலை அமைக்கும் பணிகள், கட்டுமான பணிகள், கழிவறைகளை சுத்தம் செய்யும் பணிகளைத்தான் செய்கிறார்கள் என்று திமுக எம்.பி. தயாநிதி மாறன் பேசியிருப்பதற்கு பாஜக, ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

சமூகவலை தளத்தில் வைரலாகி வரும் திமுக எம்பியின் பேச்சை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் ஷெஹ்சத் பூனாவல்லா, தயாநிதியின் பேச்சுக்காக இரண்டு மாநில இண்டியா கூட்டணித் தலைவர்களை கடுமையாக சாடியுள்ளார்.

அந்த வீடியோவில் தயாநிதி மாறன், ஆங்கிலம் படித்தவர்களையும், இந்தி படித்தவர்களையும் ஒப்பிட்டு பேசியுள்ளார். ஆங்கிலம் படித்தவர்கள் மென்பொருள் நிறுவனங்களில் கைநிறைய சம்பளத்துடன் வேலை செய்வதாகவும், இந்தி மட்டும் படித்து தமிழ்நாட்டுக்கு வருபவர்கள் சாலை அமைக்கும் பணிகள், கட்டுமான பணிகள், கழிவறைகளை சுத்தம் செய்யும் பணிகளைத்தான் செய்கிறார்கள் என்றும் பேசியுள்ளார்.

இது குறித்து பூனாவல்லா வெளியிட்டுள்ள பதிவில், “மீண்டும் ஒரு பிரித்தாளும் முயற்சி நடந்துள்ளது. முதலில் ராகுல் காந்தி வட இந்திய வாக்காளர்களை அவமதித்தார். பின்னர் ரேவந்த் ரெட்டி பிஹார் டிஎன்ஏ வை அவமதித்தார். அதற்கும் பின்னர் திமுக எம்.பி. செந்தில் குமார் கோமூத்திர மாநிலங்கள் என்று பேசினார். இப்போது தயாநிதிமாறன் இந்தி பேசுபவர்களையும் வடக்கையும் அவதூறாக பேசியுள்ளார். இந்துக்களை, சனாதனத்தை அவமதிப்பது, பிரித்தாளும் (divide and rule card) விளையாட்டை செய்வது இண்டியா கூட்டணியின் டிஎன்ஏவிலே உள்ளது. நிதிஷ்குமார், தேஜஸ்வி யாதவ், லாலு பிரசாத் யாதவ், காங்கிரஸ், அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட கூட்டணியினர் எதுவும் நடக்காதது போல இருக்கப் போகிறார்களா? எப்போது ஒரு நிலைப்பாட்டை எடுக்கப்போகிறார்கள்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மகாராஷ்டிராவில் ரயில் விபத்து: 12 பேர் உயிரிழப்பு, 40 பேர் காயம்

east tamil

‘எல்லை தாண்டி செல்ல வேண்டாம்’ – தமிழக மீனவர்களுக்கு மீன்வளத் துறை அறிவுரை

Pagetamil

மருதங்கேணி பொலிஸாரால் சற்றுமுன் இரண்டு பெண்கள் கைது: மேலும் இருவருக்கு அழைப்பு

east tamil

ஆசிரியரின் ஆபாச பேச்சால் தற்கொலைக்கு முயன்ற 10ம் வகுப்பு மாணவி

east tamil

மாணவியை மிரட்டி நிர்வாண வீடியோ எடுத்த மாணவர்கள் கேரளாவில் கொடூரம்

east tamil

Leave a Comment