Pagetamil
கிழக்கு

மாமனாரை அடித்துக் கொன்ற மருமகன், 15 வயது மகனிற்கு விளக்கமறியல்!

மட்டக்களப்பு நகர் பகுதியில் குடும்ப உறவினரின் குடும்ப பிரச்சனையை தீர்ப்பதற்கு சென்றவரை தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட தந்தையையும் 15 வயதுடைய மகனையும் எதிர்வரும் 7 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறும் சிறுவனை சிறுவர் சீர்திருத்த சிறைச்சாலையில் வைக்குமாறும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் ரி.தியாகேஸ்வரன் நேற்று (26) உத்தரவிட்டார்.

ஏறாவூர் ஆறுமுகதான் குடியிருப்பு பாராதி வீதியைச் சேர்ந்த 56 வயதுடைய ஓய்வு பெற்ற பொலிஸ் உத்தியோகத்தரான தம்பிப்பிள்ளை மனேகராஜா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவத்தில் உயிரிழந்தவர் மட்டக்களப்பு இரண்டாம் குறுக்கு வீதியிலுள்ள அவரது சகோதரியின் மகளின் குடும்பமான கணவன் மனைவிக்குள் ஏற்பட்டுள்ள குடும்ப பிரச்சனையை தீர்ப்பதற்காக சம்பவதினமான ஞாயிற்றுக்கிழமை (25) திகதி பகல் 2 மணியளவில் குறித்த வீட்டிற்கு சென்றுள்ளார்.

இந்த நிலையில் குறித்த குடும்ப பிரச்சனை தொடர்காக கணவன் மனைவியுடன் பேசிக் கொண்டிருந்தபோது அதனை 15 வயதுடைய அவர்களின் மகன் கையடக்க தொலைபேசியில் வீடியோ எடுத்ததையடுத்து உயிரிழந்தவர் அந்த சிறுவனின் கையடக்க தொலைபேசியை பறித்து அவனின் கன்னத்தில் அடித்துள்ளார்.

இதனையடுத்து தனது சிறுவனான மகனை அடித்ததையடுத்து கோபமடைந்து உயிரிழந்தவரை தந்தையும் மகனும் சேர்ந்து அடித்து தாக்கி சோபா செட்டில் தள்ளியுள்ளனர்.

இதனையடுத்து தாக்கியவர்களை உறவினர்கள் விலக்கிய பின்னர் அவரை பார்த்தபோது மூச்சின்றி கிடந்ததையடுத்து அவரை உடன் அருகிலுள்ள மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் சென்று பார்வையிட்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டார்.

இதனிடையே சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட தந்தையையும் 15 வயது மகனையும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் ரி.தியாகேஸ்வரன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவர்களை எதிர்வரும் 7ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறும் சிறுவனை சிறுவர் சீர்திருத்த சிறைச்சாலையில் வைக்குமாறும் பதில் நீதவான் உத்தரவிட்டார்.

இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தம்பலகாமத்தில் ஜனநாயக பங்குதாரர்களுடனான கலந்துரையாடல்

east tamil

திருகோணமலை மாவட்ட செயலக தைப்பொங்கல் விழா – 2025

east tamil

யானையின் தாக்குதலால் வைத்தியசாலையில் ஒருவர் அனுமதி

east tamil

திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் மற்றுமொரு விபத்து

east tamil

அலஸ்தோட்ட கடற்கரையில் இறந்த திமிங்கலம்: புதைக்கும் பணிகள் முன்னெடுப்பு

east tamil

Leave a Comment