24.9 C
Jaffna
February 7, 2025
Pagetamil
இலங்கை

காங்கேசன்துறையில் துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான சொத்துக்களை சேதப்படுத்தி, தொடரும் இரும்பு திருட்டு

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பகுதியில் துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான சீமெந்து தூண்களை உடைத்து அவற்றின் கம்பிகளை திருடர்கள் திருடி செல்கின்றனர்.

இது தொடர்பில் வலிகாமம் வடக்கு பிரதேச சபையினர் மற்றும் , காங்கேசன்துறை பொலிஸாருக்கு அறிவித்தும் நடவடிக்கை எதுவும் இல்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

காங்கேசன்துறை முகத்திற்கு அருகில் உள்ள துறைமுக அதிகார சபையினருக்கு சொந்தமான காணியில் பெரியளவிலான சீமெந்து தூண்கள் காணப்படுகின்றன. அவை துறைமுக அபிவிருத்திக்காக கொண்டு வரப்பட்டு இருக்கலாம் என நம்பப்படுகிறது.

கடந்த காலங்களில் உயர் பாதுகாப்பு வலயமாக காணப்பட்ட அந்த பிரதேசங்களில் இராணுவத்தினர் நிலை கொண்டு இருந்த நிலையில் , இராணுவத்தினர் தற்போது அங்கிருந்து வெளியேறிய நிலையில் அவ்விடங்கள் விடுவிக்கப்பட்டுள்ளன.

அந்நிலையில் துறைமுக அதிகார சபையின் காணிக்குள் அத்துமீறி நுழையும் திருடர்கள் அங்கு காணப்படும் துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான தூண்களை உடைத்து கம்பிகளை களவாடி செல்கின்றனர்.

பெறுமதியான பல தூண்கள் காணப்படும் நிலையில் அவற்றினை இரும்புக்காக உடைத்து சேதப்படுத்தி இரும்புகளை திருடி செல்கின்றனர்.

இது தொடர்பில் ஊரவர்களால் காங்கேசன்துறை பொலிஸார் , வலிகாமம் வடக்கு பிரதேச சபையினருக்கு அறிவித்தும் நடவடிக்கை இல்லை என தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் உப அலுவலகம் , இரும்பு திருட்டு நடைபெறும் காணிக்கு அருகில் அமைந்து உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

காய்கறிகளின் விலை அதிகரிப்பு

east tamil

9 வருடங்களில் 3477 யானைகள் இறப்பு

east tamil

வீடெரிந்த எம்.பிக்களுக்கு ரணில் அள்ளிக்கொடுத்த தொகை!

Pagetamil

தமிழ்த்தேசிய அரசியலின் எதிர்காலம்

Pagetamil

வித்தியா கொலை வழக்கு – குற்றவாளிகளின் மேன்முறையீட்டை விசாரிக்க உள்ள உயர் நீதிமன்றம்

east tamil

Leave a Comment