25.8 C
Jaffna
January 9, 2025
Pagetamil
இலங்கை

பிரான்ஸில் இலங்கைப் பெண் கழுத்து வெட்டிக் கொலை!

பிரான்ஸின் பாரிஸ் பிராந்தியத்தின் அர்னோவீல் பகுதியில் கடந்த மார்ச் 31 ஆம் திகதி கழுத்து வெட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்த ஆசிய வம்சாவளிப் பெண் இலங்கை யைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். முதலில் இவர் இந்திய – பாகிஸ்தான் பின்னணியைக் கொண்டவராக இருக்கக் கூடும் என்றுபொலீஸார் தெரிவித்திருந்தனர்.

எனினும் அவர் பாரிஸ் புறநகரான சார்ஸல் பகுதியைச் சேர்ந்த 40 வயதான இலங்கைப் பெண் என்பது தற்போது தெரியவந்துள்ளது. ஆனால் அவர் இலங்கைத் தமிழரா என்பதை உடனடியாக உறுதி செய்யமுடியவில்லை. அவரது பெயர் விவரங்களும் வெளியிடப்
படவில்லை.

கொலை நடந்த நாளில் குறித்த பெண்ணுடன் காணப்பட்டவர் எனக் கூறப்படுகின்ற இலங்கையரான ஆண் ஒருவரை விசாரணையாளர்கள் கைது செய்ததை
அடுத்தே பெண்ணின் சடலம் சிலவாரங்களின் பின்னர் அடையாளம் காணப்பட் டுள்ளது.

கொலையுண்ட பெண் சார்ஸல் பகுதி யில் கத்தோலிக்க சமூக நல அமைப்பு ஒன்றினால் நிர்வகிக்கப்படுகின்ற வதிவிடத்தில் வசித்து வந்த காரணத்தால் அவர் காணாமற்போன விடயம் உடனடியாக எவருக்கும் தெரிய வரவில்லை என்று கூறப்படுகிறது.

பாரிஸில் உள்ள வசிப்பிடத்தில் நடத்தப்பட்ட தேடுதலை அடுத்தே கொலையுடன்
தொடர்புடைய 42 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவரது தொலை பேசி மூலமாகக் கிடைத்த முக்கிய தகவல்கள் பெண்ணின் கொலையில் தொடர்பு இருப்பதைக் கண்டறிய உதவி உள்ளன. தடுப்புக் காவலில் விசாரணை செய்த சமயத்தில் அவர் கொலையை ஒப்புக் கொண்டார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

இதையும் படியுங்கள்

குகதாசன் கண்டனம்

east tamil

‘எலிக்காய்ச்சல் வந்து சாவாய்’: யாழில் நிதி கொடுக்க மறுத்தவர்களை சபித்த மதபோதகர்!

Pagetamil

எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் பன்னிருவரும் நிபந்தனையுடன் விடுதலை

east tamil

சுண்ணாம்புக்கல் அகழ்வில் சட்டவிரோத செயற்பாடுகள் யாவும் உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும்: பொ. ஐங்கரநேசன் கோரிக்கை

Pagetamil

பிரபல தவில் வித்துவான் மகன் உயிரிழப்பு

east tamil

Leave a Comment