நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரணவாய் பகுதியில், காதல் விவகாரமொன்றில் தாயும், மகனும் கடத்தப்பட்ட பரபரப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கரணவாய் பகுதியில் நடந்த இந்த சம்பவத்தில் 14 வயதான சிறுவனும், தாயாருமே கடத்தப்பட்டுள்ளனர்.
கடந்த 25ஆம் தினதி கடத்தல் சம்பவம் நடந்தது.
தகவலறிந்த நெல்லிடி பொலிசார் விரைந்து செயற்பட்டு, இன்றைய தினமே அதே பகுதியிவ் வீடொன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறுவனை மீட்டனர்.
சிறுவனின் சகோதரியும், அவரது காதலனும் எங்கே என கேட்டு சிறுவன் தாக்கப்பட்டிருந்தது விசாரணையில் தெரிய வந்திருந்தது.
நேற்று அதிகாலை 1.30 மணியளவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தாயாரை, நெல்லியடி நகரத்தில் இறக்கி விட்டு, கடத்தல்காரரர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
கடத்தல்காரர்களின் பிடியில் இருந்த போது தாயும் தாக்கப்பட்டுள்ளார்.
கடத்தப்பட்ட பெண்ணின் மகள், ஒருவரை காதலித்திருந்த நிலையில். இருவரும் அண்மையில் தலைமறைவாகினர். அவர்களின் இருப்பிடத்தை கேட்டே. தாயும் மகனும் தாக்கப்பட்டுள்ளனர்.
காதலர்கள் இருவரும் சாதி மாறி திருமணம் செய்திருந்த நிலையில், காதலனின் பெற்றோர், அவர்களை பிரிப்பதற்கு தீவிர முயற்சி செய்து வருகிறார்கள்.
இந்த கடதலின் சூத்திரதாரினெ்ற சந்தேகத்தில் காதலின் தநதை நெல்லியடி பொலிசாரால் கைகது செய்யபபட்டுள்ளார்.