26.2 C
Jaffna
December 18, 2024
Pagetamil
குற்றம்

தனதுவயலுக்குள் அத்துமீறி நுழைந்து மணல் அகழ்ந்தவர்களை தடுக்க முற்பட்டவர் மீது கொலைவெறி தாக்குதல்!

யாழ்ப்பாணம் – தென்மராட்சி, கொடிகாமம் – பாலாவி பகுதியில் உள்ள தனது வயல் காணியில் சட்டவிரோதமாக மணல் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவர்களை தடுக்க முற்பட்ட காணி உரிமையாளர் தாக்கப்பட்டு படுகாயமடைந்துள்ளதாக கொடிகாம்ம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,

கொடிகாமம் – பாலாவி பகுதியில் உள்ள வயல் காணியில் சட்டவிரோதமான முறையில் சிலர் உழவு இயந்திரங்கள் மூலம் மணல் அகழ்வில் ஈடுபட்டு வந்திருந்தனர்.

இது குறித்த தகவல் கிடைத்த வயல் காணி உரிமையாளர் சம்பவ இடத்தரிற்கு சென்று, சட்டவிரோமதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்டிருந்தவர்களை தடுத்துள்ளார்.

இதையடுத்து, சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட தரப்பினர் வயல் காணி உரிமையாளரின் வீடு தேடிச் சென்று தாக்கி படுகாயப்படுதிச் சென்றுள்ளனர்.

இவ்வாறு அவரது வீட்டில் வைத்து சவல் மற்றும் மண்வெட்டியால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்னர்.

சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டவர்களின் தாக்குதலில் கைகளில் பலத்த காயத்திற்குள்ளான நிலையில் கொடிகாமம் பொலிஸார் மீட்கப்பட்டு சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தில், கெற்பேலி, மிருசுவிலைச் சேர்ந்த 30 வயதுடைய பொ.நிமலன் என்பவரே படுகாயமடைந்துள்ளார்.

இப் பகுதியில் தொடர்சியான மணல்கடத்தல் இடம்பெற்று வருகின்ற நிலையில் அதனை தடுத்து நிறுத்தி நிரந்தரமாக மண் வளங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படாமை குறித்து அப்பிரதேச மக்களும், சமூக ஆர்வலர்களும் விசனம் தெரிவித்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யாழில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்!

Pagetamil

போதைப்பொருள் வியாபாரியின் வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு

Pagetamil

UPDATE: கணவருடன் அடிக்கடி சண்டையிட்டு வீட்டை விட்டு வெளியேற்ற முயற்சிததற்கு காரணம் இதுவா?: மனைவியை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதிமன்றம்!

Pagetamil

கணவன் முறைப்பாடு: சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்த மனைவி கைது!

Pagetamil

மனைவியை கொன்ற கணவன்!

Pagetamil

Leave a Comment