26.6 C
Jaffna
January 7, 2025
Pagetamil
இலங்கை

யாழ் மத்திய பேருந்து நிலையத்துக்குள் பிறந்தநாள் கொண்டாடிய மேலும் 5 பேர் கைது: கைது செய்யப்படவுள்ள அனைவரினதும் விபரம் உள்ளே!

யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்து , அவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக பிறந்தநாள் கொண்டாடிய கும்பலை சேர்ந்த மேலும் ஜவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாண மாவட்ட பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

யாழ்.மத்திய பேருந்து நிலையத்திற்கு 50க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிளில் வந்த 150க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அண்மையில் ஒன்று கூடி, பேருந்து நிலையத்தில் பழக்கடை நடத்தும் ஒருவரின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

அந்த நபரின் பிறந்தநாள், அன்றைய தினத்தில் மட்டும் 4 இடங்களில் கொண்டாடப்பட்டுள்ளது.

யாழிலிருந்து தப்பியோடிய வாள்வெட்டு குழு உறுப்பினர்கள் பிரான்ஸிலும் அவரது பிறந்தநாளை கொண்டாடினர்.

மத்திய பேருந்து நிலையத்தில் பிறந்தநாள் கொண்டாடப்படுவதற்கு முன்னதாக, பேருந்துகளை அப்புறுப்படுத்துமாறும் மிரட்டியுள்ளனர்.

பிறந்தநாள் கொண்டாட்டத்தை ரிக்ரொக் சமூக ஊடகத்திலும் பகிர்ந்திருந்தனர்.

பேருந்து நிலையத்துக்குள் நுழைந்து, பொதுமக்களை மிரட்டி, பிறந்தநாள் கொண்டாடிய போது, யாழ்ப்பாண பொலிஸாருக்கு தொலைபேசி ஊடாக அறிவிக்கப்பட்ட போதிலும் பொலிஸார் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கவில்லை.

யாழ்.நகர் மத்தியில் சன நெருக்கடியான நேரத்தில் சட்டவிரோதமான முறையில் ஒன்று கூடி பிறந்தநாள் கொண்டாடியுள்ளார்கள் அது தொடர்பில் பொலிஸார் நடவடிக்கை எடுக்காதமை தொடர்பில் பலரும் விசனம் தெரிவித்து இருந்தனர்.

அதனை அடுத்து சட்டவிரோதமான முறையில் கூட்டம் கூடி பிறந்தநாள் கொண்டாடி , மக்களின் இயல்பு வாழ்வுக்கு இடையூறு ஏற்படுத்தியதுடன் மக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்க்ளை கைது செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் இருவரை கைது செய்து கடந்த சனிக்கிழமை நீதவான் முன்னிலையில் முற்படுத்தி இருந்தனர்.

அவர்களை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதவான் , சம்பவத்துடன் தொடர்புடைய பிறந்தநாள்காரர் உள்ளிட்ட அனைவரையும் கைது செய்து முற்படுத்த வேண்டும் என பொலிஸாருக்கு பணித்திருந்தார்.

அதனை அடுத்து பொலிஸார் அனைவரையும் கைது செய்வதற்க்கு தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்த நிலையில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஐவரையும் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வேலை நிறுத்தத்துக்கு தயாராகும் தனியார் பேருந்து சங்கங்கள்!

Pagetamil

இலங்கையில் 30,000 ஆசிரியர்கள் பற்றாக்குறை

east tamil

புலம்பெயர்ந்த இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

east tamil

அனுர அரசின் மாற்றம் இதுதான்!

Pagetamil

கிளிநொச்சியில் கால் வீக்கத்தால் துன்பப்படும் காட்டு யானை

east tamil

Leave a Comment