ஹமாஸ் போராளிகள் இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, இஸ்ரேல் காசா பகுதியில் “ஒரு அரசைப் போல” நடந்து கொள்ளவில்லை என்று துருக்கியின் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
“இஸ்ரேல் ஒரு அரசை விட ஒரு அமைப்பை போல செயல்பட்டால், அது அப்படியே நடத்தப்படுவதன் மூலம் முடிவடையும் என்பதை இஸ்ரேல் மறந்துவிடக் கூடாது” என்று ரெசெப் தையிப் எர்டோகன் சுட்டிக்காட்டினார்.
அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட காசா பகுதியில் இஸ்ரேலிய இராணுவத்தினர் “வெட்கக்கோடான முறைகளில்” தாக்குவதாகவும் தெரிவித்தார்.
“பொதுமக்கள் வசிக்கும் இடங்களில் குண்டுவீச்சு, பொதுமக்களைக் கொல்வது, மனிதாபிமான உதவிகளைத் தடுப்பது மற்றும் இவற்றை சாதனைகளாகக் காட்ட முயல்வது ஒரு அமைப்பின் செயல்களே அன்றி ஒரு அரசின் செயல் அல்ல” என்று அவர் கூறினார்.
துருக்கியால் பயங்கரவாதக் குழுவாக பட்டியலிடப்பட்டுள்ள குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியை (PKK) குறிப்பிடும் போது எர்டோகன் பொதுவாக “அமைப்பு” என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார். இப்பொழுது, ஒரு இஸ்ரேலையும் அந்தவிதமாக குறிப்பிட்டு, இஸ்ரேல் பயங்கரவாத செயற்பாட்டில் ஈடுபடுவதை மறைமுகமாக சுட்டிக்காட்டியுள்ளார்.
“ஒரு போருக்கு ஒரு நெறிமுறை இருக்க வேண்டும் என்றும் இரு தரப்பினரும் அதை மதிக்க வேண்டும் என்றும் நாங்கள் நினைக்கிறோம். துரதிர்ஷ்டவசமாக, இந்த கொள்கை இஸ்ரேலிலும் காஸாவிலும் கடுமையாக மீறப்படுகிறது,” என்று அவர் கூறினார்.
இஸ்ரேலிய பிரதேசத்தில் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதையும் அதை தொடர்ந்து காசாவில் அப்பாவிகள் கண்மூடித்தனமாக படுகொலை செய்யப்படுவதையும் கண்டித்தார்.