Pagetamil
உலகம்

இஸ்ரேல் இசை நிகழ்ச்சிக்கு வந்த ஜேர்மனி யுவதிக்கு நேர்ந்த கதி: நிர்வாண உடலில் எச்சில் துப்பி கொண்டாட்டம்!

இஸ்ரேல் மீது ஹமாஸ் போராளிகளின் தாக்குதலில் உயிரிழந்த ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த பெண்ணின் உடலை ஹமாஸ் போராளிகள் டிரக்கின் பின்புறத்தில் வைத்து நிர்வாண கோலத்தில் கொண்டு சென்ற வீடியோ வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.

உயிரிழந்த ஷானி லோக்கின் நிர்வாண உடலை காலால் மிதித்தபடி டிரக்கில் ஹமாஸ் போராளிகள் கொண்டு சென்றபோது, காசாவுக்குள் பாலஸ்தீனியர்கள் அந்த உடல் மீது எச்சில் துப்பி அவமரியாதை செய்கின்றனர். அப்போது, இதனைக் கண்டு டிரக்கை சுற்றி நின்றவர்களும் ஆரவாரம் செய்கின்றனர்.

அந்த உடல் இஸ்ரேல் பெண் சிப்பாய் என பாலஸ்தீனியர்கள் ஆரம்பத்தில் குறிப்பிட்டனர். அவர்கள் அப்படி நினைத்துத்தான் இறந்த உடலை காசாவுக்குள் கொண்டு வந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளதான தெரிகிறது.

உயிரிழந்த ஷானி லோக், ஹமாஸ் தாக்குதல் நடப்பதற்கு சில விநாடிகள் முன்னர் வரை இசை நிகழ்ச்சியில் மகிழ்ச்சியாக ஆடிப்பாடும் வீடியோவை நேரலையாக பதிவிட்டுள்ளார்.

அந்த இசை நிகழ்ச்சி நடந்த இடத்தில் 260 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அசை நிகழ்ச்சி நடந்த போது பரா கிளைடரில் ஹமாஸ் போராளிகள் வந்திறங்கி தாக்குதலை ஆரம்பித்ததும், அங்கிருந்தவர்கள் தப்பியோடும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

ஜெர்மனியை சேர்ந்த ஷானி லோக் இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஜெர்மனியில் இருந்து இஸ்ரேல் சென்றுள்ளார். நிகழ்ச்சி நடைபெற்ற இடம் ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதலை முதன்முதலாக தொடங்கிய எல்லைக்கு உட்பட்ட இடம் என்பதால் அவர்களால் சிறைப்பிடிக்கப்பட்டு அந்தப் பெண் கொல்லப்பட்டுள்ளார்.

டிரக்கில் மகளின் உடலை கொண்டு செல்வதை வீடியோவில் பார்த்து கதறி அழுத ஷானியின் தாயார் ரிக்கார்டா, தனது மகளின் உடலை கண்டுபிடிக்க பாலஸ்தீனர்கள் உதவுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பதவி விலகுவதாக அறிவித்தார் கனடா பிரதமர்: அமெரிக்காவின் புதிய மாநிலமாக இணைய ட்ரம்ப் அழைப்பு!

Pagetamil

உலகின் மிக வயதான பெண் காலமானார்!

Pagetamil

இறந்த குட்டியின் உடலை சுமந்தபடி சுற்றித்திரியும் திமிங்கிலம்!

Pagetamil

16 முறை விண்வெளியில் புத்தாண்டை கொண்டாடும் சுனிதா வில்லியம்ஸ்

east tamil

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி காட்டர் காலமானார்!

Pagetamil

Leave a Comment