ஹமாஸின் தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதில் காசா பகுதியில் குறைந்தது 198 பேர் கொல்லப்பட்டதாகவும் 1,610 பேர் காயமடைந்ததாகவும் பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
சனிக்கிழமையன்று ஹமாஸ் இஸ்ரேல் மீது மிகப்பெரிய தாக்குதலை நடத்தியது. காசாவில் இருந்து சரமாரியாக ரொக்கெட்டுகள் ஏவப்பட்டதுடன், இஸ்ரேலுக்குள் நுழைந்த துப்பாக்கிதாரிகளும் தாக்குதல் நடத்தினர்.




