24.2 C
Jaffna
January 4, 2025
Pagetamil
சினிமா

24 மணி நேரத்தில் 3 கோடி பார்வைகள்: யூடியூபில் ‘லியோ’ ட்ரெய்லர் சாதனை

தென்னிந்தியாவில் 24 மணி நேரத்தில் அதிக பார்வைகளை பெற்ற ட்ரெய்லர் என்ற சாதனையை ‘லியோ’ ட்ரெய்லர் படைத்துள்ளது.

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் ‘லியோ’. இந்தப் படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், பிரியா ஆனந்த், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலி கான் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிக்கிறது. வரும் ஒக்டோபர் 19ஆம் திகதி திரையரங்குகளில் இப்படம் வெளியாக உள்ளது.

கடந்த 5 ஆம் திகதி இப்படத்தில் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டது. அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த இந்த ட்ரெய்லர் சமூக வலைதளங்களில் வைரலானது. இது தொடர்பான ஹேஷ்டேகுகள் எக்ஸ் தளத்தில் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகின. இந்த நிலையில், இந்த ட்ரெய்லர் யூடியூப் தளத்தில் வெளியான 24 மணி நேரத்தில் 31 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது. தென்னிந்தியாவில் 24 மணி நேரத்துல் அதிக பார்வைகளை பெற்ற ட்ரெய்லர் என்ற சாதனையை லியோ ட்ரெய்லர் படைத்துள்ளது. மேலும், தென்னிந்தியாவில் 24 மணி அதிக லைக்குகளை (2.64 மில்லியன்) பெற்ற ட்ரெய்லரும் இதுவாகும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

12 ஆண்டு பிரச்சினை தீர்ந்து வெளியாகிறது மதகஜராஜா

Pagetamil

பொங்கல் ரேஸில் இருந்து விலகியது ‘விடாமுயற்சி’

Pagetamil

மறைந்த சின்னத்திரை நடிகை சித்ரா தந்தை தற்கொலை

Pagetamil

சல்மான் கான் மீது காதல்: நினைவு கூர்கிறார் சுஷ்மிதா சென்

Pagetamil

‘சூர்யா 44’ பட டைட்டில் டீசர் டிச.25இல் ரிலீஸ்

Pagetamil

Leave a Comment