ஆசிரியர்தினத்தில் கேக் சாப்பிட்ட மாணவர்கள் வைத்தியசாலையில்

Date:

ஊராபொல மத்திய மகா வித்தியாலயத்தில் ஆசிரியர் தினத்தை கொண்டாடுவதற்காக பாடசாலைக்கு கொண்டு வரப்பட்ட கேக்கை சாப்பிட்டதால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக ஒன்பது மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கல்லூரியில் 07ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களே இவ்வாறு வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்த மாணவர்கள் குழு இன்று (06) நண்பகல் 12.00 மணியளவில் வட்டுபிட்டிவல அடிப்படை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்றைய ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பாடசாலைக்கு கொண்டுவரப்பட்ட கேக் ஒன்று ஆசிரியர்களுக்கு பரிமாறப்பட்டதாகவும், பின்னர் அதனை சிறுவர்கள் குழுவொன்றும் உண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அங்கு இந்த மாணவர்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த கேக்குகளை ஊராபொல பிரதேசத்தில் உள்ள கடையொன்றில் இருந்து பாடசாலை மாணவிகள் கொள்வனவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

கொக்கட்டிச்சோலையில் இருந்து மண்முனைபற்றுக்கு கசிப்பு கடத்திய இருவர் 800 லீற்றர் கசிப்புடன் கைது

கொக்கட்டிச்சோலையில் இருந்து மண்முனைபற்று பிரதேசத்திற்கு வாவி ஊடாக தோணியில் கசிப்பு கடத்தி...

மட்டக்களப்பில் தீ விபத்துகளை தடுக்க தீயணைப்பு சிலிண்டர் கருவிகள் பொருத்துவது கட்டாயம் மாநகர சபை முதல்வர் அதிரடி உத்தரவு

மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அண்மைக்காலமாக வர்த்தக நிலையங்கள், தங்குமிடங்கள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்