காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட இரண்டு பிக்குனிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதுருகிரிய காவல்துறையின் குழந்தைகள் மற்றும் பெண்கள் பணியகம் தெரிவித்துள்ளது.
அதுருகிரியவில் உள்ள மடம் ஒன்றில் இருந்த 15 மற்றும் 14 வயதுடைய இரண்டு பிக்குனிகள் செப்டம்பர் 3 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
முறைப்பாட்டின் பிரகாரம், பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்த போது, சேருநுவர பிரதேசத்தில் வசிக்கும் பிக்குனி ஒருவரின் தாயார், தனது மகள் மற்றுமொரு பெண் பிக்குனியுடன் தனது வீட்டிற்கு வந்துள்ளதாக தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.
வீட்டிற்குச் சென்ற பொலிஸார், மடத்திலிருந்து காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட பிக்குனிகள் இருவர் என அடையாளம் கண்டுள்ளனர்.




