இன்றைய காலகட்டத்தில் எல்லோருடைய போன்களிலும் என்ன ஆப் இருக்கிறதோ இல்லையோ வாட்ஸ்அப் கண்டிப்பாக இருக்கும். ஆனால் வாட்ஸ்அப்பை எப்படி பாதுகாப்பாக பயன்படுத்துவது என்பது பலருக்கும் தெரிவதில்லை. பலரும் இந்த வாட்ஸ்அப் தகவல்கள் எல்லாம் நமக்கு மட்டுமே தெரிந்த ஒன்று என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால், பல உண்மையான விவரங்கள் தெரியாமல் நீங்கள் செய்யும் ஒரு தவறுதலான விஷயம் உங்களை சிக்கலில் சிக்கவைத்துவிடும். இதனால் நீங்கள் சிறைக்கு செல்லவும் நேரக்கூடும். எனவே வாட்ஸ்அப்பை எப்படி பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும், என்னென்ன மாதிரியான மெசேஜ்களை எல்லாம் ஃபார்வேர்டு செய்யக்கூடாது என்பதையெல்லாம் நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும்.
சட்டத்துக்குப் புறம்பான மெசேஜ்களை அனுப்ப வேண்டாம்
- புதிய படங்கள் ரிலீஸ் ஆகியிருக்கும் வேளையில், அந்த படம் ஏதேனும் சட்டத்துக்கு புறம்பான வலைதளத்தில் வெளியாகியிருந்தால் அந்த படத்தின் இணைப்பை திருட்டுத்தனமாக நீங்கள் வாட்ஸ்அப்பில் அனுப்பக்கூடாது.
- அதே போல குறிப்பிட்ட தினங்களில் உங்கள் பணத்தை இரட்டிப்பாக்கும் திட்டம் என்ற ஏதேனும் போலியான நிறுவனங்களின் திட்டங்களை ஃபார்வேர்டு செய்யக்கூடாது.
- இது போன்ற தவறுதலான மெசேஜ்களை நீங்கள் பார்வேர்டு செய்தால் உங்கள் கணக்கு முடக்கப்படலாம்.
- வாட்ஸ்அப் மெசேஜ்கள் தான் encrypt செய்யப்பட்டிருக்கே, அதை எப்படி வேறொருவர் படிக்க முடியும் என்று நீங்கள் கேட்கலாம்.
- ஆனால், ஒரு நபர் இது போன்ற போலியான மெசேஜ்களுக்கு எதிராக புகார் அளித்தால், அது போன்ற சூழ்நிலையில் உங்கள் மெசேஜ்களுக்கான அணுகலை காவல்துறை பெறக்கூடும் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
- மேலும், வாட்ஸ்அப்பில் ஆபாசமான, மிரட்டல் விடுப்பது போன்ற மோசமான செய்திகளை அனுப்பக்கூடாது. இது போன்ற தவறுகளை செய்வது ஆபத்தானது. இந்த மெசேஜ்களை அடிப்படையாக கொண்டு, காவல் நிலையத்தில் புகார் அளித்தால், நீங்கள் சிறைக்குச் செல்லவும் நேரலாம்.
- கலவரத்தைத் தூண்டும் வகையில் வாட்ஸ்அப்பில் யாருக்கும் சட்டத்துக்கு புறம்பான செய்திகளை அனுப்பக்கூடாது. மேலும் வாட்ஸ்அப்பில் யாரிடமும் தற்கொலை செய்யும்படி சொல்லக்கூடாது.
- இதுபோன்ற எந்த செய்தியையும் வாட்ஸ்அப்பில் எழுதவோ, அனுப்பவோ வேண்டாம். ஏனெனில் அது குற்றமாக பார்க்கப்படும்.
தவறாக ஒரு போலி கணக்கை உருவாக்க வேண்டாம்
- வாட்ஸ்அப்பில் போலி கணக்குகளை உருவாக்கி மக்களுக்கு தொல்லைக்கொடுக்க கூடாது. போலி கணக்குகளுடன் மக்களை துன்புறுத்துபவர்கள் சட்டத்தின் கீழ்
- குற்றவாளியாக கருதப்படுகிறார்கள்.
உங்கள் போலி கணக்கு மூலம் துன்புறுத்துவது குறித்து யாராவது புகார் செய்தால், நீங்கள் சிறைக்குச் செல்லவும் நேரலாம்.
மொத்தமாக செய்திகளை ஃபார்வேர்டு செய்யக்கூடாது
- ஒரு போலியான மெசேஜை உருவாக்கி அதை மொத்தமாக பல நபர்களுக்கு ஃபார்வேர்டு செய்வது கூடாது. ஏற்கனவே வாட்ஸ்அப், இந்த கொரோனா காலத்தில் போலியான மெசேஜ்கள் ஃபார்வேர்டு செய்யப்படுவதை தடுக்க ஒரு மெசேஜை அதிகபட்சம் 5 பேருக்கு மட்டுமே ஃபார்வேர்டு செய்யும் வகையில் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
- வாட்ஸ்அப் கொள்கைக்கு எதிராக இந்த bulk messages உள்ளன. எனவே, இயந்திர கற்றல் உதவியுடன் மொத்த செய்திகளை அனுப்பும் கணக்குகளை வாட்ஸ்அப் அடையாளம் கண்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டும் வருகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1