கேதர் ஜாதவை வச்சு செஞ்ச மிஸ்ரா!

Date:

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் கேதர் ஜாதவை, அமித் மிஸ்ரா பெவிலியனுக்கு அனுப்பினார்.

ஐபிஎல் 14ஆவது சீசன் 20ஆவது லீக் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத், டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. இப்போட்டி சூப்பர் ஓவர் வரை சென்ற நிலையில் டெல்லி கேபிடல்ஸ் அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றிபெற்றது.

முதலில் களமிறங்கிய டெல்லி அணி 159/4 ரன்கள் குவித்தது. இலக்கை துரத்திக் களமிறங்கிய ஹைதராபாத் அணியில் ஜானி பேர்ஸ்டோ (38), கேன் வில்லியம்சன் (66) ஆகியோர் மட்டுமே சிறப்பாக விளையாடினர். மற்ற அனைவரும் ஒற்றை இலக்க ரன்கள் மட்டுமே எடுத்தனர். இறுதியில் 9ஆவது இடத்தில் களமிறங்கிய ஜகதீசா சுஜித் 6 பந்துகளில் 14 ரன்கள் எடுத்ததன் காரணமாக ஆட்டம் டிரா ஆனது.

இலக்கை துரத்திய ஹைதராபாத் அணியில் 11.2ஆவது ஓவரின்போது கேதர் ஜாதவ் களமிறங்கினார். சமீபத்தில் நடைபெற்ற உள்ளூர் தொடர்களில் ஜாதவ் சிறப்பாக விளையாடியிருந்தார். இதனால், இவர் மீது கூடுதல் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், கடந்த சீசனைப் போலவே இந்த வருடமும் முதல் பந்திலிருந்தே இருந்தே சொதப்பினார். 9 பந்துகளை எதிர்கொண்டு 9 ரன் மட்டுமே அடித்த இவர் தடுமாறுவதை கண்டு மிஸ்ரா பந்தை தீவிரமாக சுழற்றினார். இதனை அறியாத அமித் மிஸ்ரா பந்தை தூக்கி அடிக்க வேண்டும் என்ற நோக்கில் கிரிஸை விட்டு வெளியேறி ஸ்டெம்பிட் ஆனார்.

இதன்மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் ஸ்டெம்பிட் மூலம் அதிக விக்கெட்களை வீழ்த்தி வீரராக மிஸ்ரா தொடர்ந்து நீடிக்கிறார்.

ஸ்டெம்பிட் மூலம் அதிக விக்கெட்கள் (ஐபிஎல்):
  • அமித் மிஸ்ரா (28)
  • ஹர்பஜன் சிங் (18)
  • பியூஷ் சாவ்லா (16)
  • யுஜ்வேந்திர சாஹல் (13)
  • பிராக்யன் ஓஜா (12)
spot_imgspot_img

More like this
Related

கனடாவிற்கு கப்பலில் புறப்பட்ட இலங்கைத்தமிழர் அனாதையாய் ஆபிரிக்காவில் உயிரிழந்த சோகக்கதை!

பாதுகாப்பைத் தேடி இந்தியாவிலிருந்து கனடாவுக்குப் புறப்பட்ட இலங்கைத் தமிழர் ஒருவரின் நீண்ட...

ரௌடி கோபுவிடமிருந்து எம்மை காப்பாற்றுங்கள்: மட்டக்களப்பில் மக்கள் போராட்டம்

வவுணதீவு வாழைக்காலை பிரதேசத்தில் கோபு வாள்வெட்டு குழுவின் தாக்குதலை கண்டித்தும் வாள்வெட்டு...

தவறான உறவு சந்தேகத்தில் மனைவியை கொன்றுவிட்டு பொலிசில் சரணடைந்த கணவன்!

மனைவி தனது உறவினரான இளைஞர் ஒருவருடன் திருமணத்திற்கு புறம்பான உறவில் இருப்பதாக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்