26.2 C
Jaffna
January 22, 2025
Pagetamil
சினிமா

ஏ.ஆர்.ரஹ்மான் மீது பண மோசடி புகார்

இசை நிகழ்ச்சி நடத்த முன்பணமாகப் பெற்றுக் கொண்ட ரூ.29.50 லட்சத்தை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் திருப்பித் தரவில்லை என்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தினர் போலீஸில் புகார் அளித்துள்ளனர்.

பிரபல திரைப்பட இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மீது இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தினர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று புகார் மனு ஒன்றை அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:

தேசிய அறுவை சிகிச்சை நிபுணர்கள் மாநாட்டை, சென்னையில் கடந்த 2018, டிசம்பர் 26 முதல் 30ஆம் திகதி வரை நடத்த திட்டமிட்டோம். அதில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை நடத்துவதற்காக அவருக்கு முன்தொகையாக ரூ.29 லட்சத்து 50ஆயிரம் கொடுத்தோம். ஆனால், நிகழ்ச்சி நடத்த இடமும் அனுமதியும் தமிழக அரசிடமிருந்து கிடைக்கவில்லை.

எனவே, முன்தொகையை திரும்பத் தரும்படி அவருக்கு கடிதம் அனுப்பினோம். ஏ.ஆர்.ரஹ்மான் அதற்கு ஒப்புக்கொண்டு, அந்த தொகைக்கான பின் தேதியிட்ட காசோலையை கொடுத்தார். ஆனால், சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்கில் பணம் இல்லையென காசோலை திரும்ப வந்துவிட்டது.

நாங்கள் கொடுத்த பணத்தைத் தரும்படி கடந்த 5 ஆண்டுகளாக ஏ.ஆர்.ரஹ்மானிடம் தொடர்ந்து கேட்டு வருகிறோம். ஆனால், இதுவரை எங்கள் பணம் திருப்பி தரப்படவில்லை. எனவே, ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் அவரது செயலாளர் செந்தில்வேலவன் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுத்து, எங்களது பணத்தை திரும்ப பெற்றுத்தர வேண்டும் என்று புகார் மனுவில் கூறியிருந்தனர்.

இந்நிலையில், இந்தக் குற்றச்சாட்டை ஏ.ஆர்.ரஹ்மான் தரப்பில் செந்தில் வேலவன் மறுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியது:

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சம்பந்தமில்லை: 2018ஆம் ஆண்டு ‘ASICON 2018 Chennai’ என்ற 3 நாள் நிகழ்வுக்காக ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சி மற்றும் வேறு சில நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக எங்கள் நிறுவனத்தை தொடர்பு கொண்டார்கள். நாங்கள் ஏ.ஆர்.ரஹ்மானிடம் பேசி அனுமதி பெற்றோம். இதன்பின் நிகழ்ச்சி நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்தோம்.

அப்போது, இசை நிகழ்ச்சிக்காக ஏ.ஆர்.ரஹ்மான் பெயரில் ரூ.25 லட்சம், வேறு நிகழ்ச்சிக்காக ரூ.25 லட்சம் என 2 காசோலைகளை அந்த அமைப்பினர் வழங்கினர்.அவர்களிடம் நடந்த பேச்சுவார்த்தையில் நீங்களாகவே (சம்பந்தப்பட்ட அமைப்பு) நிகழ்ச்சிகளை நிறுத்தினால் அல்லது ரத்து செய்தால் கலைஞர்களுக்கு வழங்கப்படும் முன்பணம் திரும்பி தரப்படாது என குறிப்பிட்டு இருந்தோம். அதன்படி நிகழ்ச்சியை அவர்கள் ரத்து செய்தால் முன்பணம் திரும்பி வழங்க தேவையில்லை என்பது உள்ளிட்ட நிபந்தனைகள் ஒப்பந்தத்தில் இணைக்கப்பட்டு கையெழுத்தானது.

இதற்கிடையே, இசை நிகழ்ச்சியை அந்த அமைப்பால் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. எனவே அவர்கள் இசை நிகழ்ச்சியை ரத்து செய்தனர். அந்த அமைப்பினரே இசை நிகழ்ச்சி ரத்துசெய்த நிலையிலும் ஏ.ஆர்.ரஹ்மான் பெயரில் வழங்கப்பட்ட ரூ.25 லட்சத்துக்கான காசோலை அந்த அமைப்புக்கு திருப்பி வழங்கப்பட்டு விட்டது. இந்த நிலையில் தேவையில்லாமல் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயரை இந்த புகாரில் இணைத்துள்ளனர். அவருக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

சட்டப்படி எதிர்கொள்வோம்: மேலும், ஏற்கெனவே செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், கலைஞர்களுக்கு கொடுக்கப்பட்ட முன்தொகை திருப்பி வழங்க தேவையில்லை. புகாரை சட்டப்படி எதிர்கொள்வோம். அந்த அசோசியேஷன் மீது நாங்கள் வழக்கு தொடர உள்ளோம் என அவர் கூறினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ரவி மோகன் – ஆர்த்தி தம்பதி விவாகரத்து வழக்கு: நீதிபதியின் உத்தரவு என்ன?

Pagetamil

பாலையாவுடன் நடன சர்ச்சை: ஊர்வசி ரவுதெலா விளக்கம்

Pagetamil

பிரபல நடிகர் சயிப் அலிகான் மீது வீடு புகுந்து தாக்குதல்

east tamil

‘பகவந்த் கேசரி’ ரீமேக்தான் ‘விஜய் 69’ – உடைந்த ரகசியம்

Pagetamil

விபத்தில் சிக்கிய அஜித்தின் நலம் குறித்து ஆர்வம் காட்டிய அருண் விஜய்

east tamil

Leave a Comment