25.4 C
Jaffna
February 6, 2025
Pagetamil
இலங்கை

யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற பேருந்து மோதி 2 பேர் பலி

குருநாகல் தம்புள்ளை பிரதான வீதியின் கலேவெல பெலிகமுவ பிரதேசத்தில் இன்று (24) காலை தனியார் பேருந்தும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதியதில் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து எம்பிலிப்பிட்டி நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றும், ஆராச்சிக்கட்டுவ பகுதியில் இருந்து தம்புள்ளை நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றும் விபத்துக்குள்ளாகியுள்ளன.

விபத்தில் சிக்கிய முச்சக்கரவண்டியில் ஆராச்சிக்கட்டுவ பகுதியைச் சேர்ந்தவர்கள் பயணித்தனர் என தற்போதைய ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக கலேவெல பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த இருவரின் சடலங்கள் கலேவெல பிரதேச வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், காயமடைந்த பெண் ஒருவரும் மற்றுமொரு ஆண் மற்றும் 6 வயது சிறுவன் ஒருவரும் கலேவெல வைத்தியசாலையில் இருந்து தம்புள்ளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

காய்கறிகளின் விலை அதிகரிப்பு

east tamil

9 வருடங்களில் 3477 யானைகள் இறப்பு

east tamil

வீடெரிந்த எம்.பிக்களுக்கு ரணில் அள்ளிக்கொடுத்த தொகை!

Pagetamil

தமிழ்த்தேசிய அரசியலின் எதிர்காலம்

Pagetamil

வித்தியா கொலை வழக்கு – குற்றவாளிகளின் மேன்முறையீட்டை விசாரிக்க உள்ள உயர் நீதிமன்றம்

east tamil

Leave a Comment