கடந்த இரவில் 19 உக்ரேனிய ட்ரோன்களை கிரிமியன் தீபகற்பம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கருங்கடலுக்கு மேலே அழித்ததாக ரஷ்யா கூறியது. மேலும் ஏனைய பகுதிகளில் 3 ட்ரோன்கள் அழிக்கப்பட்டன.
ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு டெலிகிராமில் ஒரு அறிக்கையை வெளியிட்டது, ட்ரோன்களைக் கவனித்தவுடன் விமான எதிர்ப்புப் பிரிவுகள் செயல்பட்டதாகவும் அவற்றை உடனடியாக சுட்டதாகவும் கூறியது.
“செப்டம்பர் 20 முதல் 21 வரை இரவில், ரஷ்ய கூட்டமைப்பில் உள்ள தளங்களில் ஆபத்தான ட்ரோன்கள் மூலம் பயங்கரவாதத் தாக்குதலை நடத்த கிய்வ் ஆட்சியின் முயற்சி தடுக்கப்பட்டது,” என்று அமைச்சு தெரிவித்துள்ளது.
“வான் பாதுகாப்பு அமைப்புகள் கருங்கடல் மற்றும் கிரிமியா குடியரசின் பிரதேசத்தின் மீது 19 உக்ரேனிய ஆளில்லா வான்வழி வாகனங்களையும், குர்ஸ்க், பெல்கோரோட் மற்றும் ஓரியோல் பிராந்தியங்களில் ஒவ்வொன்றையும் அழித்தன” என்று அது மேலும் கூறியது.