மன்னார் சௌத்பார் கடற்கரைப் பகுதியில் வோட்டர் ஜெல் வெடிமருந்தை பயன்படுத்தி மீன்பிடிக்க முயன்ற 5 பெர் நேற்று (19) கைது செய்யப்பட்டதாக கடற்படை அறிவித்தது.
கைதானவர்கள் மன்னார் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
13 வோட்டர் ஜெல் குச்சிகளுடன் டிங்கி படகும் கைப்பற்றப்பட்டது.
கைதானவர்கள் மன்னாரை சேர்ந்த 24 வயது தொடக்கம் 41 வயதுக்கு இடைப்பட்டவர்கள்.




