தாழ்த்தப்பட்ட சாதிகளை சேர்ந்தவர்களும், ஏழைகளே பெரும்பாலும் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்தனர் என புதிய குண்டை போட்டுள்ளார் அவுஸ்திரேலியாவில் வசிக்கும் தமிழ் எழுத்தாளரான சங்கரி சந்திரன்.
அவுஸ்திரேலியாவின் உயரிய இலக்கிய விருதான மைல்ஸ் பிராங்கிளின் விருது அண்மையில் சங்கரி சந்திரனுக்கு வழங்கப்பட்டிருந்தது.
அவுஸ்திரேலியாவில் சட்டத்தரணியாகவும் பணியாற்றும் அவர், 3 நாவல்களை எழுதியுள்ளார்.
அண்மையில் அவர் அளித்துள்ள நேர்காணல் ஒன்றில்- சமூக ஏற்றத்தாழ்வு சாதிப் போராட்டங்கள் தமிழர்களின் விடுதலை போராட்டத்தில் தாக்கம் செலுத்தின. பெரும்பாலான புலிகள் தாழ்த்தப்பட்ட சாதி மற்றும் ஏழை வகுப்பினர் என நான் நினைக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
What’s your Reaction?
+1
+1
1
+1
+1
+1
+1
+1