யாழ்ப்பாணம் கனகரத்தினம் மகா வித்தியாலயம் இன்று சுகாதாரப் பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. சுகாதாரப் பிரிவினர் அனுமதி பெறாது பாடசாலை நிர்வாகமானது சனசமூக நிலையம் ஒன்றுக்கு விளையாட்டு நிகழ்வு நடத்துவதற்கு பாடசாலை மைதானத்தினை வழங்கியதன் காரணமாக இன்றைய தினம் குறித்த பாடசாலை தனிமைப் படுத்தப் பட்டுள்ளது.
நேற்றையதினம் சனசமுக நிலையத்தின் விளையாட்டு போட்டி விமரிசையாக இடம்பெற்றதோடு பல நூற்றுக் கணக்கான மக்களும் அந்த விளையாட்டு நிகழ்வில் கலந்து கொண்டதன் அடிப்படையில் இன்றைய தினம் குறித்த பாடசாலை,விளையாட்டு மைதானம் தனிமைப் படுத்தப் பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1