இரண்டு புதைபடிவ “மனிதர் அல்லாத” அன்னிய சடலங்கள் மெக்சிக்கோ அரசியல்வாதிகளுக்கு காட்டப்பட்டுள்ளன.
மெக்சிகன் காங்கிரஸின் சிறப்பு அமர்வில் அரசியல்வாதிகள் முன் “ஏலியன்” என்று கூறப்படும் இருவரின் உடல்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன.
இந்த விவகாரம் அடையாளம் தெரியாத பறக்கும் பொருள், ஏலியன்கள் பற்றிய உரையாடல்களை மீண்டும் தூண்டியுள்ளது.
செப்டம்பர் 12, அன்று மெக்சிகோ நகரில் உள்ள சான் லாசாரோ சட்டமன்ற அரண்மனையில் அடையாளம் தெரியாத பறக்கும் பொருள்கள் பற்றிய விளக்கக்காட்சியின் போது இந்த உடல்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன.
பெருவின் குஸ்கோ நகரில் அவை கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அவை 1,000 ஆண்டுகள் பழமையானவை என்றும் அரசியல்வாதிகளுக்குக் கூறப்பட்டது.
இந்த நிகழ்வு பத்திரிகையாளரும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் ஆராய்ச்சியாளருமான ஜெய்ம் மௌசானால் வழிநடத்தப்பட்டது. இந்த இரண்டு சடலங்களினதும் டிஎன்ஏவில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு “தெரியாதது” என்றும், அந்த மாதிரிகள் “நமது நிலப்பரப்பு பரிணாமத்தின்” பகுதியாக இல்லை என்றும் சாட்சியமளித்தார்.
“இந்த மாதிரிகள் பூமியில் நமது பரிணாம வரலாற்றின் ஒரு பகுதியாக இல்லை,” என்று அவர் மெக்சிக்கோ அரசாங்க அதிகாரிகள் மற்றும் அமெரிக்க பிரதிநிதிகளுக்கு தனது விளக்கக்காட்சியில் கூறினார்.
“அவை அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்களின் விபத்தில் இருந்து மீட்கப்பட்டவை அல்ல. அதற்கு பதிலாக, அவை டயட்டம் (பாசி) சுரங்கங்களில் காணப்பட்டன, பின்னர் அவை புதைபடிவமாக மாறியது.” என்றார்.
“பரந்த பிரபஞ்சத்தில் நாம் தனியாக இல்லை, இந்த யதார்த்தத்தை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்,” என்று மவுசன் கூறினார், மனிதர் அல்லாத உயிரினங்கள் மற்றும் தொழில்நுட்பங்களைப் பற்றி அறிய பொதுமக்களுக்கு உரிமை உண்டு என்று வாதிட்டார்.
எவ்வாறாயினும், பெருவில் உள்ள நாஸ்காவிற்கு அருகில் ஒரு வேற்றுகிரகவாசியின் உடல் என்று கூறப்படும் – மம்மி செய்யப்பட்ட உடல்- காண்பிக்கப்பட்டு பின்னர் நிராகரிக்கப்பட்டது.
சமீபத்திய கண்டுபிடிப்பு பற்றி பேசிய மௌசன், மெக்ஸிகோவின் தன்னாட்சி தேசிய பல்கலைக்கழகத்தில் மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டதாக கூறினார்.
டிஎன்ஏ ஆதாரங்களை சேகரிக்க விஞ்ஞானிகள் ரேடியோகார்பன் டேட்டிங் பயன்படுத்தியதாகவும், எக்ஸ்-கதிர்கள் உள்ளே “முட்டை” இருப்பதைக் காட்டியதாகவும் அவர் கூறினார்.
இந்த தகவல் தங்களுக்கு “சிந்தனைகள்” மற்றும் “கவலைகளை” ஏற்படுத்தியதாகவும், “இதைப் பற்றி தொடர்ந்து பேச வேண்டும்” என்ற நோக்கத்தில் இருப்பதாகவும் காங்கிரஸ் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
ரியான் கிரேவ்ஸ், ஒரு முன்னாள் அமெரிக்க கடற்படை விமானி, ஜூலை மாதம் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் அல்லது அடையாளம் தெரியாத முரண்பாடான நிகழ்வுகள் பற்றி மொத்தமாக குறைத்து அறிக்கையிடப்படுகிறது” எனக் கூறினார்.
1947 ஆம் ஆண்டில் நியூ மெக்ஸிகோவின் பாலைவனத்தில் பூமிக்கு அப்பாற்பட்ட விண்கலம் விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது, இது அமெரிக்க அரசாங்கத்தால் மறைக்கப்பட்டதாக கோட்பாட்டாளர்கள் கூறுகின்றனர். அங்கு வேற்றுகிரகவாசிகளின் உடல்கள் மீட்கப்பட்டதாகவும் கூறுகிறார்கள்.