விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘துக்ளக் தர்பார்’ திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாவது உறுதி!

Date:

தமிழ்த் திரையுலகில் ஒரு நடிகரின் பல படங்கள் வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளன என்றால் அது விஜய் சேதுபதியின் படங்கள்தான். அவர் நாயகனாக நடித்துள்ள ‘மாமனிதன்’, ‘லாபம்’, ‘கடைசி விவசாயி’, ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’, ‘துக்ளக் தர்பார்’ உள்ளிட்ட படங்கள் வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளன.

தற்போது மீண்டும் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்து வருவதால், பல தயாரிப்பாளர்கள் தங்களுடைய படங்களை ஓடிடி வெளியீட்டுக்குப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இதில் விஜய் சேதுபதி நடித்துள்ள ‘துக்ளக் தர்பார்’ படமும் ஓடிடி வெளியீட்டுக்குப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

ஹாட்ஸ்டார் ஓடிடி நிறுவனம் நல்ல விலை கொடுக்க முன்வந்ததைத் தொடர்ந்து, ‘துக்ளக் தர்பார்’ திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாவது உறுதியாகியுள்ளது. ‘மாஸ்டர்’ படத்தை விநியோகம் செய்த லலித்குமார் தான் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

அறிமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, பார்த்திபன், ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன், கருணாகரன், பக்ஸ் பெருமாள், ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முழுக்க அரசியல் பின்னணி கொண்ட களமாக இந்தப் படத்தின் கதையை உருவாக்கியுள்ளார் டெல்லி பிரசாத் தீனதயாளன்.

ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா மற்றும் இசையமைப்பாளராக கோவிந்த் வசந்தா ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். இந்தப் படத்துக்கான வசனத்தை இயக்குநர் பாலாஜி தரணிதரன் எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

இலங்கைக்கு பெருந்தொகை போதைப்பொருளை கடத்த முயன்ற விஜய் கட்சி பிரமுகர் சிக்கினார்!

இலங்கைக்கு கடத்துவதற்காக ரூ.135 கோடி மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் பதுக்கி வைத்திருந்த நாகையைச்...

‘மஹிந்தவுக்கு ஏவுகணை அடித்தால் எல்லாம் சரியாவிடும்’: எக்னொலிகொட வழக்கில் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் சாட்சியம்!

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில், ஜனாதிபதி பயணிக்கும் விமானத்தின் மீது...

ஷிராந்திக்கு பிணை!

‘சிரிலிய சவிய’ கணக்கு தொடர்பான விசாரணைகளுக்கு அமைய இலஞ்ச ஊழல் விசாரணை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்