யாழ்ப்பாணம் நீர்வேலியில் நேற்றிரவு யுவதி ஒருவர் மீது வாள் வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
யுவதியின் வீட்டுக்குச் சென்ற அடையாளம் தெரியாதோர் குறித்த யுவதியின் மீதும் அவரது தாய் மீதும் வாள்வெட்டு தாக்குதலை நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
தாக்குதலுக்கு இலக்கான இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
24 வயதான யுவதியும், தாயாருமே வாள்வெட்டுக்கு இலக்காகினர். பாதிக்கப்பட்ட யுவதி சில மாதங்களின் முன்னர் வரை ஊடகத்துறையில் பணியாற்றியதாகவும், தற்போது அதிலிருந்து ஒதுங்கி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
உறவு தொடர்பான சிக்கல்களால் இந்த வாள்வெட்டு நிகழ்ந்ததா என்ற கோணத்திலும் பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோப்பாய் பொலிசார் விசாரணைகளை நடத்தி வருகிறார்கள்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
1
+1